தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரிய வேவு கோளை அழிக்கத் தயாராகும் ஜப்பான்

1 mins read

வட­கொ­ரி­யா­வின் வேவு செயற்­கைக்­கோள் ஜப்­பா­னின் எல்­லைக்­குள் வந்­தால் அதைச் சுட்டு அழிக்­கத் தயா­ரா­கும்­படி ஜப்­பா­னின் தற்­காப்­புப் படைக்கு அந்­நாட்டின் தற்­காப்பு அமைச்­சர் யாசு­காசு ஹாமாடா உத்­த­ர­விட்­டுள்­ளார். வெடி­குண்டு ஏவு­கணை விழுந்­தால் அதன் பாதிப்­பு­க­ளைக் குறைக்க, ஒக்கி­னாவா நக­ரின் தெற்­குப் பகு­திக்கு படை­களை நகர்த்­து­வது ஆயத்­தங்­களில் ஒன்று.

அம­ரிக்கா, தென்­கொ­ரியா நாடு­க­ளி­லி­ருந்து வரும் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­ளும் வண்­ணம் வட­கொ­ரியா அதன் முதல் வேவு செயற்­கைக்கோ­ளைப் பாய்ச்­சும் திட்­டம் தொட­ர­வேண்­டும் என்று வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன் கூறி­ய­தாக அந்நாட்டு ஊட­கம் புதன்­கி­ழமை கூறி­யது. செயற்­கைக்­கோ­ளைச் செலுத்த நீண்ட தூர எறி­கணை தேவை. எறி­கணை­யைப் பாய்ச்ச வட­கொ­ரி­யா­விற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2012லும் 2016லும் வட­கொ­ரியா செயற்­கைக்­கோள் பாய்ச்­சல் என்ற பெய­ரில் வெடி­குண்டு ஏவு­கணை­க­ளைப் பயிற்சி செய்­து பார்த்ததும் அந்த இரு ஏவு­க­ணை­களும் ஒக்கி­னாவா நக­ரைத் தாண்டி பறந்­த­தும் குறிப்­பி­டத்­தக்­கது.