பருவநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரிப்பு

பருவநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரிப்பு

2 mins read
e4f7ffa7-5f69-4bb3-bb47-5cfc5856029f
-

அனல் கக்­கும் கோடை­க்கால வெப்­பத்­தி­லி­ருந்து மாண­வர்­க­ளை­யும் பள்­ளிக்­கூட ஊழி­யர்­க­ளை­யும் பாது­காக்க பிலிப்­பீன்ஸ் கல்­வித் துறை சுற்­ற­றிக்கை ஒன்றை அனுப்பி உள்­ளது.

இன்று (திங்­கட்­கி­ழமை) முதல் நேரடி வகுப்­பு­களை பள்­ளி நிர்­வா­கங்­கள் தள்ளி வைக்க அதில் ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

முன்­ன­தாக, அதிக வெப்­பத்­தைச் சமா­ளிக்­கும் வச­தி­கள் எது­வும் அர­சாங்­கப் பள்­ளி­களில் இல்லை என்று ஏசிடி எனப்­படும் அக்­க­றை­யுள்ள ஆசி­ரி­யர் கூட்­ட­மைப்பு தெரி­வித்து இருந்­தது.

கொளுத்­தும் வெயி­லால் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­க­ளின் ஆரோக்­கி­யத்­துக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டால் நேரடி வகுப்­பு­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­து­விட்டு மெய்­நி­கர் கற்­பித்­தல் முறைக்கு மாறிக்­கொள்­ளும்­படி பள்ளி முதல்­வர்­க­ளுக்கு நினை­வூட்­டப்­பட்டு உள்­ள­தாக கல்­வித் துறைப் பேச்­சா­ளர் மைக்­கல் புவா கூறி­னார்.

மலே­சி­யா­வி­லும் வெப்­பத்­தின் தாக்­கம் கடு­மை­யாக இருந்­து­வரும் வேளை­யில், அதி­க­மாக தண்­ணீர் குடித்து, வெளிப்­புற நட­வடிக்­கை­க­ளைக் குறைத்­துக்­கொள்­ளும்­படி அதி­கா­ரி­கள் பொது­மக்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

தொடர்­சி­யாக மூன்று நாள்­களாக சரா­சரி அதி­க­பட்ச வெப்ப­நிலை 37 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­டி­னால், வெப்ப அலை ஏற்­ப­டு­வ­தா­கக் கரு­தப்­படும் என்று சாபா சுகா­தா­ரத் துறை கூறி­யது.

பொது­வாக மார்ச், ஏப்­ரல் மாதங்­களில் கோடைக்­கால வெப்பம் நில­வும்.

வெளிப்­பு­றங்­களில் குடை­ அல்­லது தொப்­பி­யைப் பொது­மக்கள் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று சுகா­தா­ரத் துறை அறி­வுறுத்­தி­ இருக்கிறது.

வெளிர் நிற­மு­டைய, இலே­சான உடை­க­ளை­யும் அணி­யும்­படி­யும் 'கெஃபேன்', மது­பா­னங்­கள் உட்­கொள்­வ­தைக் குறைத்துக்­கொள்­ளும்­ப­டி­யும் ஊக்­கு­விக்­கப்­படு­கிறது.

அன்­றாட வானி­லை­யைப் பொது­மக்­கள் தொடர்ந்து கண்­கா­ணிக்­கும்­ப­டி­யும் சுகா­தார, பாது­காப்பு வழி­காட்­டு­தல்­க­ளின்­படி தங்­கள் அன்றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­ப­டி­யும் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், தாய்­லாந்­துத் தலை­ந­கர் பேங்­காக்­கி­லும் மற்ற பகு­தி­க­ளி­லும் கடும் வெப்­பம் கார­ண­மாக வெளியே செல்ல வேண்­டாம் என மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பேங்­காக்­கில் நேற்று வெப்­ப­நிலை 42 டிகிரி செல்­சி­யசை எட்­டி­யது.

பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வில் நேற்று வெப்­ப­நிலை 40.6 டிகிரி செல்­சி­யசைத் தொட்­டது. ஐம்­பத்து எட்டு ஆண்­டு­களில் இந்த வெப்­ப­நி­லை­தான் ஆக அதி­கம் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஆசியா, தென்கிழக்காசிய நாடுகளில் இவ்வாண்டு வெயில் வாட்டிவதைப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.