விலைவாசி உயர்வு மார்ச்சில் அதிகமில்லை

விலைவாசி உயர்வு மார்ச்சில் அதிகமில்லை

2 mins read
7e519b9c-5471-4e09-b529-048923bc634c
கடந்த சில மாதங்­களாக மூலா­தா­ரப் பண­வீக்­க­மும், ஒட்டு­ மொத்த பண­வீக்­க­மும் உச்­சக்­கட்­டத்­தில் அதி­க­ரித்து வந்­தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் விலை­வாசி (பண­வீக்­கம்) சற்று நிம்­ம­தி­ய­ளிக்­கும் வகை­யில் மார்ச் மாதத்­தில் மித­மாக அதி­க­ரித்­தது.

கடந்த சில மாதங்­களாக மூலா­தா­ரப் பண­வீக்­க­மும், ஒட்டு­ மொத்த பண­வீக்­க­மும் உச்­சக்­கட்­டத்­தில் அதி­க­ரித்து வந்­தன.

இந்த நிலை­யில் மார்ச் மாதத்­தில் பண­வீக்­கம் அந்த அளவுக்கு அதி­க­ரிக்­க­வில்லை.

தனி­யார் போக்­கு­வ­ரத்து, தங்குமி­டச் செல­வு­கள் நீங்கலாக மூலா­தார பய­னீட்­டா­ளர் விலை­கள், சிங்­கப்­பூ­ரின் குடும்­பச் செல­வு­களை துல்­லி­ய­மா­கப் பிரதிபலிக்­கின்­றன. இது, மார்ச் மாதத்­தில் ஆண்டு அடிப்­ப­டை­யில் 5% கூடி­யது. ஆனால் பிப்­ர­வ­ரி­யில் கூடிய 5.5 விழுக்­காட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது குறைவு.

2008ஆம் ஆண்டின் நவம் ­ப­ருக்­குப் பிறகு பிப்­ர­வ­ரி­யில்­தான் முதல்­மு­றை­யாக குடும்­பச்­செலவு புதிய உச்­சத்­தைத் தொட்­டது.

சேவைத் துறை, உணவு, சில்­லறை வர்த்­த­கம் மற்­றும் இதர பொருள்­க­ளின் விலை­கள் மிதமாக அதி­க­ரித்­த­தால் மூலா­தா­ரப் பண­வீக்­க­மும் மெது­ வடைந்­தது.

இவ்­வாண்டு இரண்­டா­வது மாத­மாக ஒட்­டு­மொத்த பய­னீட்­டா­ளர் குறி­யீடு அல்­லது ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் தொடர்ந்து மித­மாக அதி­க­ரித்­துள்­ளது.

பிப்­வ­ர­யில் 6.3 விழுக்­காட்­டி­லி­ருந்த பண­வீக்­கம் மார்ச்­சில் 5.5 விழுக்­காட்­டுக்­குச் சரிந்­தது. இது, ஜன­வ­ரி­யில் 6.6 விழுக்­ கா­டாக இருந்­தது.

தனி­யார் போக்குவரத்து துறையில் பண­வீக்­கம் குறைந்­ததே இதற்கு முக்­கிய கார­ண­மா­கும்.

மூலா­தா­ரப் பண­வீக்­கம், ஒட்டு­மொத்த பண­வீக்­கம் ஆகிய இரண்­டுமே ராய்ட்­டர்ஸ் மதிப்­பிட்­ட­தை­விட குறைவாகவே இருந்­தன.

ஆனால் ஆண்டு முழு­மைக்குமான ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 5.5 முதல் 6.5 விழுக்­காடு வரை­யி­லும் மூலா­தா­ரப் பண­வீக்­கம் 3.5லிருந்து 4.5 விழுக்­காடு வரை­யி­லும் இருக்­கும் என்ற அதி­கா­ர­பூர்வ கணிப்­பில் மாற்­ற­மில்லை.

இந்த மதிப்­பீட்­டில் கடந்த ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஏழு விழுக்­காட்­டி­லி­ருந்து எட்டு விழுக்­காட்டுக்கு உயர்த்தப்பட்ட பொருள் சேவை வரியும் உள்ளடங்கியிருக்கிறது.

எரி­சக்தி, உணவு பொருள்­ க­ளின் விலை­கள் கடந்த ஆண்டைவிட சற்றுக் குறைந்­துள்­ளது.

இதன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் இறக்­கு­மதி விலை­கள் குறைந்­தது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று தெரி­வித்­தன.