தமிழகத்தின் 'ஜி ஸ்கொயர்' அலுவலகங்களில் திடீர் சோதனை

தமிழகத்தின் 'ஜி ஸ்கொயர்' அலுவலகங்களில் திடீர் சோதனை

2 mins read
e13ed98b-7f7a-4187-a49f-a5bb394d5b00
-

தமி­ழத்­தின் மிக­வும் பிர­ப­ல­மான ஜி ஸ்கொ­யர் சொத்து நிறு­வ­னத்­தின் அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித் துறை­யி­னர் நேற்று அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­தி­னர்.

அதி­கா­லை­யில் சோதனை தொடங்­கி­யது. ஒரே நேரத்­தில் சென்னை, கோவை, திருச்சி உள்­ளிட்ட இடங்­களில் அந்­நி­று­ வ­னத்­துக்­குச் சொந்­த­மான அலு­வ­ல­கங்­களில் சோதனை தொடங்­கியதாக உள்­ளூர் ஊட­கம் ஒன்று குறிப்­பிட்­டது.

சென்­னை­ சேத்­துப்­பட்­டில் உள்ள ஹாரிங்­டன் சாலை, ஆழ்­வார்ப்­பேட்டை போன்ற இடங்­களில் செயல்­படும் ஜி ஸ்கொ­யர் அலு­வ­ல­கங்­க­ளி­லும் சோதனை நடை­பெற்­றது.

ஏறக்­கு­றைய 50க்கும் மேற்­பட்ட இடங்­களில் வரு­மான வரித்­து­றை­யி­னர் சோதனை நடத்­தி­னர்.

தமி­ழ­கம் மட்­டு­மல்­லா­மல் கர்­நா­டகா, தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­க­ளி­லும் ஜி ஸ்கொ­ய­ருக்­குச் சொந்­த­மான இடங்களில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

மேலும், சென்னை அண்ணா நகர் திமுக எம்­எல்ஏ மோகன் மற்­றும் அவ­ரது மகன் வீட்­டி­லும் சோதனை நடந்­தது. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து அவ­ரது வீட்டு முன்பு குவிந்த திமுக வினர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட தாகக் கூறப்­ப­டு­கிறது.

ஒரே சம­யத்­தில் ஏரா­ள­மான நிலங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் குறைந்த காலத்­தி­லேயே அதிக வரு­மா­னத்தை ஈட்­டி­ய­தா­க­வும் ஜி ஸ்கொ­யர் மீது புகார் கூறப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் தமி­ழக பார­திய ஜனதா கட்­சித் தலை­வர் அண்­ணா­மலை திமு­க­வி­ன­ரின் பல்­வேறு ஊழல்­களை வெளி­யி­டு­ வ­தா­கக் கூறி ஒரு பட்­டி­யலை வெளி­யிட்­டி­ருந்­தார்.

அப்­போது இந்த நிறு­வ­னத்­தின் மீதும் அவர் பல்­வேறு குற்றச்­சாட்­டு­களை முன்­வைத்­தார். இந்த நிலை­யில் வரு­மான வரித் துறை­யின் சோதனை நடந்­துள்­ளது.

இதற்­கி­டையே தங்­கள் நிறு­ வ­னம் மீது அண்­ணா­மலை முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­கள் பொய்­யா­னவை என்று ஜி ஸ்கொ­யர் தெரி­வித்­துள்­ளது.

"ஜி ஸ்கொ­யர் நிறு­வ­னம் திமுக குடும்ப உறுப்­பி­னர் களுக்கு சொந்­த­மா­னதோ அல்­லது அவர்­கள் கட்­டுப்­பாட்­டில் உள்ள நிறு­வ­னமோ அல்ல. திமுக ஆட்சி அமைப்­ப­தற்கு முன்பே பல ஆண்­டு­க­ளாக எங்­கள் நிறு­வ­னம் தொழில் செய்து வரு­கிறது.

ஜி ஸ்கொ­யர் மற்­றும் அதன் பங்­கு­தா­ரர்­க­ளின் கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளின் மதிப்பு தவ­றாக சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எங்­கள் நிறு­வ­னத்­தின் சொத்து குறித்து அண்­ணா­மலை வெளி­யிட்ட குற்­றச்­சாட்டு முற்­றி­லும் தவ­றா­னது," என்று ஜி ஸ்கொ­யர் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் விளக்­க­ம­ளித்­தது.