பேருந்து, ரயில் கட்டணத்தைக் கணக்கிடுவதற்குப் புதிய முறை

பேருந்து, ரயில் கட்டணத்தைக் கணக்கிடுவதற்குப் புதிய முறை

3 mins read

ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும் பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­டண மாற்றம் தொடர்­பில் புதிய கணக்கீட்டு முறை பின்­பற்­றப்­படும் என்று பொதுப் போக்­கு­வரத்து மன்­றம் அறி­வித்­து இருக்கிறது.

ரயில், பேருந்­துக் கட்­ட­ணங்­க­ளுக்­கான புதிய கணக்­கீட்டு முறை இவ்­வாண்டு முதல் 2027ஆம் ஆண்­டு­வரை செயல்­பாட்­டில் இருக்­கும்.

இப்­போ­தைக்கு `கட்­ட­மைப்­புக் கொள்­ள­ள­வுக் காரணி'யின் அடிப்­ப­டை­யில் கட்­டண முறை மறு­ஆய்வு இடம்­பெற்று வரு­கிறது. இனி, அதற்­குப் பதி­லாக `கொள்­ள­ளவு மாற்­றக் காரணி'யின் அடிப்­ப­டை­யில் கட்­டண மறு­ஆய்வு இடம்­பெ­றும். கொள்­ள­ளவு மாற்­றக் கார­ணி­யா­னது ஆண்­டிற்கு 1.1 விழுக்­காடு என நிலை­யான அள­வில் இருக்­கும்.

கொவிட்-19 பர­வ­லுக்­கு­முன் கட்­ட­மைப்­புக் கொள்­ள­ள­வுக் கார­ணி­யா­னது 1.6 விழுக்­காடு முதல் 3.9 விழுக்­கா­டு­வரை இருந்­தது. ஆனால், பய­ணி­களின் எண்­ணிக்­கை­யில் பெரும் சரிவு ஏற்­பட்­ட­தால் அக்­கா­ர­ணி­யின் மதிப்­பும் கூடி­யது.

அதனால், 2020 பிப்­ர­வரிக்­குப் பிறகு கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை­யிலி­ருந்து அந்தக் கா­ரணி நீக்­கப்­பட்­டது.

ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை குறித்த மறு­ஆய்வு இடம்­பெ­று­வது வழக்­கம். அண்­மைய மறு­ஆய்வு நட­வ­டிக்­கைக்­கா­கப் பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் பத்­துப் பேர் கொண்ட பணிக்­ கு­ழுவை அமைத்­தது.

பய­ணி­கள், கல்­வி­யா­ளர்­கள், பொதுப் போக்­கு­வ­ரத்து சேவை வழங்­கு­நர்­கள், தேசிய போக்­கு­வரத்து ஊழி­யர்­கள் தொழிற்­சங்­கம் எனப் பல­த­ரப்­பி­ன­ரு­ட­னும் மன்­றம் கலந்­து­ரை­யா­டி­யது. அத­னைத் தொடர்ந்து, கட்­ட­ணக் கணக்­கீட்டு முறைக்­கான ஐந்து கார­ணி­களில் மூன்­றைத் தொடர்ந்து கருத்­தில்­கொள்ள மன்­றம் முடி­வு­செய்­தது.

அம்­மூன்­றும் மூலா­தா­ரப் பண­வீக்­கம், ஊதி­யம், எரி­பொ­ருள் விலை ஆகி­ய­வற்­றில் ஆண்­டிற்கு ஆண்டு ஏற்­படும் மாற்­றங்­க­ளைக் காட்­டும் கார­ணி­கள்.

புதிய கணக்­கீட்டு முறை மூலம் கட்­ட­ணங்­களில் செய்­யப்­படும் மாற்­றம் பெரி­தும் ஏற்ற இறக்­க­மாக இராது என்று மன்­றம் குறிப்­பிட்­டது.

அத்­து­டன், சமூக, பொரு­ளி­யல் சூழல் கார­ண­மாக கட்­டண மாற்­றங்­களை அடுத்­த­டுத்த கட்­டண மறு­ஆய்வு நட­வ­டிக்­கை­கள்­வரை தள்­ளிப்­போ­டு­வ­தற்­கான செயல்­மு­றை­யைத் தொட­ர­வும் மன்­றம் முடி­வு­செய்­துள்­ளது.

அதா­வது, கொவிட்-19 நோய்ப்­ப­ர­வல், எரி­பொ­ருள் விலை­யில் பெரும் ஏற்­றம் போன்ற சூழ்­நி­லை­யில் கட்­டண உயர்­வால் ஏற்­படும் தாக்­கத்­தைத் தணிக்க அம்­முறை உத­வு­கிறது.

சென்ற ஆண்டு கட்­ட­ணத்தை 2.9 விழுக்­காடு உயர்த்­திக்­கொள்ள அனு­மதி வழங்­கிய மன்­றம், 10.6 விழுக்­காடு உயர்வை இவ்­வாண்டு மறு­ஆய்வு நட­வ­டிக்­கை­வரை தள்­ளிப்­போட்­டது.

"கட்­டண உயர்­வைத் தள்ளிப்­ போ­டு­வ­தால் அர­சாங்­கம் கூடு­தல் மானி­யங்­களை வழங்க வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தை­யும் பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் கவ­னத்­தில் கொண்­டுள்­ளது," என்று மன்­றம் தெரி­வித்­தது.

அர­சாங்­கம் தற்­போது ஆண்­டிற்கு $2 பில்­லி­ய­னுக்­கும் அதிக­மான தொகை­யைப் பொதுப் போக்­கு­வ­ரத்து மானி­யங்­க­ளாக வழங்கி வரு­கின்­றது.

அண்­மைய கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை மறு­ஆய்வு நட­வ­டிக்­கை­யா­னது சரி­யான நேரத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­றும் ஆனால் அது சவா­லா­ன­தாக இருந்­தது என்­றும் மன்­றத்­தின் தலை­வர் ஜெனட் ஆங் கூறி­னார்.

"14 ஆண்­டு­களில் இல்­லாத அளவு பண­வீக்க உயர்வு, எரி­பொ­ருள் விலை­யில் ஏற்ற இறக்­கம், உயர்ந்­து­வ­ரும் மனித­வ­ளச் செல­வு­கள் ஆகி­யவை ஒரு­பக்­கம் இருக்க, கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிறகு பய­ணம் செய்­வோர் எண்­ணிக்கை கூடி­யுள்­ளதா என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை. அதே வேளை­யில், பொதுப் போக்­கு­வ­ரத்து அமைப்­பில் தொடர்ந்து மேம்­பாடு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன," என்­றார் திரு­வாட்டி ஆங்.

பரிந்துரைகள் ஏற்பு

இத­னி­டையே, பொதுப் போக்கு­வரத்து மன்­றம் முன்­வைத்­துள்ள புதிய கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை­யை­யும் அதன் பரிந்­து­ரை­களை­யும் அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கப் போக்கு­வரத்து அமைச்சு தெரி­வித்­து உள்­ளது.

கட்­டுப்­ப­டி­யா­கும் வகை­யி­லான கட்­ட­ணம், பொதுப் போக்­கு­வ­ரத்து அமைப்­பின் நிதி நிலைத்­தன்மை என இரண்­டிற்­கும் இடையே சம­நி­லை­யைப் பேண மன்­றத்­தின் பரிந்­து­ரை­கள் இலக்கு கொண்­டுள்­ளன என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

மேலும், கட்­ட­ணத்­தில் ஏற்ற இறக்­கத்­தைக் குறைக்க உதவு­வதும் அவற்­றின் நோக்­கம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.