எதிர்காலத்திற்கு தயாராக ஊழியர்களுக்கு உதவி

2 mins read

தோளோடு தோள் நிற்க தொழிற்சங்கம் உறுதி

சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் எதிர்­காலத்­தில் செழிப்­பு­ற ஏதுவாக, தொழில்­நுட்­ப­வி­யல் மாற்­றம், புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், பொரு­ளி­ய­லில் நிலை­யற்ற தன்மை போன்­ற­வற்­றால் ஏற்­படும் சவால்­களைச் சமா­ளிக்க அர­சாங்­கத்­து­ட­னும் நிறு­வ­னங்­க­ளு­ட­னும் தோளோடு தோள் நிற்­போம் என்று தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) தெரி­வித்­துள்­ளது.

சம்­ப­ளம், வேலை­யி­டச் சூழல், ஓய்­வு­பெ­றும் வயது போன்­றவை தொடர்­பில் உல­கின் பல பகு­தி­களி­லும் தொழிற்­சங்­கங்களும் தொழி­லா­ளர்­களும் நிறு­வ­னங்­களு­டன் முட்­டி­மோதி வரு­கின்­றனர்.

ஆனால், தொழி­லக உற­வு­களை நிர்­வ­கிப்­ப­தில் அத்­த­கைய மோதல் போக்கு என்­டி­யு­சி­யின் அணு­கு­மு­றை­யாக இராது என்று என்­டி­யுசி தலை­வர் மேரி லியூ­வும் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங்­கும் தெரி­வித்­துள்­ள­னர்.

இவ்­வாண்­டிற்­கான மே தினச் செய்­தி­யில், தொழிற்­சங்­கம் முன்­னு­ரிமை அளிக்­க­வி­ருக்­கும் விஷ­யங்­க­ளை­யும் அதன் திட்­டங்­கள் குறித்த அண்­மைய தக­வல்­க­ளை­யும் அவர்­கள் பட்­டி­ய­லிட்­ட­னர்.

ஊழி­யர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் வித­மாக, நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து 1,300 நிறு­வ­னப் பயிற்­சிக் குழுக்­களை அமைத்­துள்­ள­தாக அவர்­கள் குறிப்­பிட்­டனர்.

கடந்த 2019ஆம் ஆண்­டில் அத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது முதல் இது­வரை 100,000 ஊழி­யர்­கள் பய­ன­டைந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர்­கள், மேலும் பல நிறு­வனங்­கள் அத்­திட்­டத்­தில் இணைய வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி இருக்­கின்­ற­னர்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­கள், இணை­ய­வழி ஊழி­யர்­கள், வர்த்­த­கத் தொழி­லர்­கள், நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள் போன்­றோ­ருக்­கு உத­வ­வும் நட­வடிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வதாக தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் இரு­வ­ரும் குறிப்­பிட்­ட­னர்.

எடுத்துக்காட்டாக, ஜூலை­ மாதவாக்­கில் கழிவு மேலாண்மை, சில்­லறை வணி­கம், உணவு சேவை­கள் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த 135,000 குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் படிப்­ப­டி­யான சம்­பள உயர்­வுத் திட்­டத்­தின்­கீழ் சம்­பள உயர்வு பெறு­வர்.

மத்­திய சேம நிதிப் பங்­க­ளிப்பு போன்ற வழி­களில் இணை­ய­வழி ஊழி­யர்­க­ளின் ஓய்­வுக்­கா­லம், வீட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த அர­சாங்­கம், நிறு­வ­னங்­கள் என்ற தனது முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­க­ளு­டன் என்­டி­யுசி இணைந்து செய­லாற்றி வரு­கிறது.

குழாய், மின்­சார வேலை செய்­யும் தொழில்­நுட்­பர்­கள் நல்ல தேர்ச்­சி­க­ளை­யும் ஊதி­யத்­தை­யும் பெற்று மேம்­பட ஏது­வாக, வாழ்க்­கைத்­தொ­ழில் மேம்­பாட்டு மாதி­ரித் திட்­டத்­தைத் தழு­வு­மாறு அவர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வர்.