தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் தடங்களை இந்தியா உட்பட 51 நாட்டினர் பயன்படுத்தலாம்

தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் தடங்களை இந்தியா உட்பட 51 நாட்டினர் பயன்படுத்தலாம்

1 mins read
eab0759a-8aa6-4fb9-ad83-fa172385e35e
-

சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­த­ரும் வெளி­நாட்­டுப் பய­ணி­களில் அதிக­மா­னோர் தானி­யக்­கத் தடங்­க­ளின் மூலம் குடி­நு­ழை­வுச் சோத­னையை நிறை­வு­செய்­ய­லாம்.

இந்­தியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன், கனடா, சீனா, ஹாங்­காங் உட்­பட 51 பகு­தி­களின் கடப்­பி­தழ் வைத்­துள்­ளோ­ருக்­குத் தானி­யக்­கத் குடி­நு­ழைவு சோதனை முறை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­கள் ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு இத்­திட்­டம் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­ட­போது 16 நாடு­களைச் சேர்ந்தவர்கள் தானி­யக்­கத் தடங்­க­ளைப் பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இது­வரை நான்கு மில்­லி­யனுக்­கும் மேற்­பட்­ட வெளிநாட்டவர்கள் தானி­யக்­கத் தடங்­க­ளைப் பயன்­படுத்தி­யுள்­ள­னர்.

`ஏபெக்' தொழில்முறை பயண அட்டை­தா­ரர்­களும் இனி தானி­யக்­கத் தடங்­க­ளைப் பயன்­படுத்­த­லாம். ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­திற்­குள் குறு­கி­ய­கால வணி­கப் பய­ணம் மேற்­கொள்ள அந்த அட்டை வகை­செய்­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு முதன்­மு­றை­யாக வரு­கை­பு­ரி­யும் தகு­தி­யுள்ள வெளி­நாட்­டுப் பய­ணி­கள் குடி­நுழை­வுச் சோத­னைக்­கா­கத் தானி­யக்­கத் தடங்­க­ளைப் பயன்­படுத்த தானி­யக்­கக் குடி­நு­ழை­வுச் சோத­னைத் திட்­டம் வழி­வகை செய்­கிறது.

வரும் 2024 முதல் காலாண்டு­வாக்­கில், சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோ­ரில் 95 விழுக்­காட்­டி­னர் தானி­யக்­கத் தடங்­கள் ­வழியாக கு­டி­நுழை­வுச் சோத­னையை முடித்­துச் செல்ல முடி­யும் என்று ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது.

தானி­யக்­கத் தடங்­க­ளுக்கு இட­மும் மனி­த­வ­ள­மும் அதி­கம் தேவைப்­ப­டு­வ­தில்லை என்­றும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

சாங்கி விமான நிலை­யத்­தில் 130 தானி­யக்­கத் தடங்­க­ளி­லும் நில­வழி சோத­னைச்­சா­வ­டி­களில் 40 தானி­யக்­கத் தடங்­க­ளி­லும் தானி­யக்­கக் குடி­நு­ழை­வுச் சோத­னைத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் சோத­னைச்­சா­வ­டி­களில் சென்ற ஆண்டு மொத்­தம் 125 தானி­யக்­கத் தடங்­கள் நிறு­வப்­பட்­டன.