ஹவ்காங்கில் பேருந்து-கார் விபத்து; எண்மர் மருத்துவமனையில் அனுமதி

ஹவ்காங்கில் பேருந்து-கார் விபத்து; எண்மர் மருத்துவமனையில் அனுமதி

2 mins read
53224e82-f457-40ef-8f31-01b90a3db68e
-

ஹவ்­காங்­கில் ஈர­டுக்­குப் பேருந்­தும் காரும் நேற்று மோதிக்­கொண்ட விபத்­தில் காய­முற்ற எட்­டுப் பேர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

அவர்­கள் 33வய­துக்கும் 85 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

ஹவ்­காங் அவென்யூ 4- புவாங்­கோக் கிரீன் சந்­திப்­பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 10.35 மணிவாக்­கில் தனக்கு தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

விபத்­தில் சம்­பந்­தப்­பட்­டவை ஒரு வெள்ளை நிற காரும் பேருந்து எண் சேவை 43ம் என்று சீன நாளி­த­ழான சாவ்­பாவ் குறிப்­பிட்­டது.

பேருந்­தின் முன்­ப­கு­தி­யும் காரின் வல­துப்­பு­ற­மும் சேத­ம் அடைந்­தன.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த கோ-அஹெட் நிறு­வ­னப் பேச்­சாளர், "போக்­கு­வ­ரத்து விளக்கு பச்சை நிறத்­தில் ஒளிர்ந்­து­கொண்டி­ருந்­த­போது சாலைச் சந்­திப்­பில் பேருந்து நேரா­கச் சென்­று­கொண்­டி­ருந்­தது. அப்போது வல­துப்­பு­றம் திரும்­பிய தனி­யார் வாக­னத்­து­டன் மோது­வதை அப்­பே­ருந்­தால் தவிர்க்க முடி­ய­வில்லை," என்­றார்.

"எங்­க­ளது முழு உத­வி­யை­யும் வழங்க, பாதிக்­கப்­பட்ட பய­ணி­களு­டன் நாங்­கள் தொடர்­பில் இருந்து வரு­கி­றோம். அதி­கா­ரி­களின் விசா­ர­ணைக்கு நாங்­கள் தொடர்ந்து முழு ஒத்­து­ழைப்­பை­நல்­கு­வோம்," என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு­செல்­லப்­பட்­ட­போது அந்த எட்டுப் பேரும் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

அவர்களில் இரு­வர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­கும் அறு­வர் செங்­காங் பொது மருத்­து­வ­மனைக்­கும் கொண்­டு­செல்லப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்புப் படை கூறி­யது.

அந்­தப் பேருந்­தின் கீழ் அடுக்­கில் இருந்த முதி­ய­வர் ஒரு­வர் உள்ளிட்ட பய­ணி­கள் சற்று காயம் அடைந்ததைத் தாம் கண்ட­தாக, அதன் மேல் அடுக்கில் இருந்த பயணி ஒரு­வர் சாவ்­பாவ் நாளி­தழி­டம் கூறி­னார்.

விபத்து தொடர்­பாக அதி­காரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.