சிங்கப்பூரர் நலனுக்காக வரி உயர்வு

சிங்கப்பூரர் நலனுக்காக வரி உயர்வு

3 mins read

கூடுதல் முத்திரை வரி கூட்டப்பட்டது

குறித்து டெஸ்மண்ட் லீ விளக்கம்

குடி­யி­ருப்­புச் சொத்­து­கள் மீதான முத­லீட்­டில் உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் எழுந்­தி­ருக்­கும் தேவை­யைக் குறைக்­கவே புதி­தாக கூடு­தல் முத்­திரை வரி கொண்டு வரப்­ப­டு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்து உள்­ளார்.

அத்­து­டன் சிங்­கப்­பூ­ரர்­கள் சொந்த வீட்­டில் குடி­யே­றும் வகை­யில் அவர்­கள் வீடு வாங்­கு ­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்­க­வும் புதிய நட­வ­டிக்கை அமல்­படுத்­தப்­ப­டு­வ­தாக அவர் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

உலக அள­வி­லான பொரு­ளி­யலின் நிச்­ச­ய­மற்ற நிலை அதி­க­ரிப்­பது சிங்­கப்­பூ­ரின் வளர்ச்சி வாய்ப்­பு­களில் தாக்­கத்தை ஏற்­படுத்­தக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அண்­மை­யில் எச்­ச­ரித்து இருந்­ததை அவர் எடுத்­துக் கூறி­னார்.

மேலும், வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­டு­வது, அமெ­ரிக்க-சீன வர்த்­த­கப் பதற்­றத்­தால் விநி­யோ­கத் தொடர் மறு­கட்­ட­மைக்­கப்­படு­வது போன்ற நில­வ­ரங்­க­ளுக்கு இடை­யில் ஆணை­யம் இந்த எச்­ச­ரிக்­கையை வெளி­யிட்டு இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் குடி­யி­ருப்­புச் சொத்­து­களை வாங்­கும் வெளி­நாட்­டி­ன­ருக்­கான கூடு­தல் முத்­திரை வரியை 30 விழுக்­காட்­டில் இருந்து 60 விழுக்­காட்­டுக்கு இரட்­டிப்பு செய்­வ­தாக புதன்­கி­ழமை இரவு நிதி அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் ஆகி­யன கூட்­டா­கத் தெரி­வித்து இருந்­தன. வரி உயர்வு நேற்று (வியா­ழக்­கி­ழமை) முதல் உட­ன­டி­யாக நடப்­புக்கு வரு­வ­தா­க­வும் அறி­விக்­கப்­பட்­டது. புதன்­கி­ழமை இரவு அறி­விக்­கப்­பட்ட வரி உயர்­வில் இதுவே ஆக அதி­க­மான உயர்வு. மேலும் சில முத்­திரை வரி உயர்­வு­களும் அறி­விக்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரர்­கள் இரண்­டா­வது வீட்டை வாங்­கும்­போது செலுத்த வேண்­டிய கூடு­தல் முத்­திரை வரி 17 விழுக்­காட்­டி­லி­ருந்து 20 விழுக்­காட்­டுக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அதே­போல, மூன்­றா­வது வீட்டை வாங்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் செலுத்த வேண்­டிய கூடு­தல் முத்­திரை வரி உயர்வு 25 விழுக்­காட்­டில் இருந்து 30 விழுக்­காட்­டுக்கு உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கான கூடு­தல் முத்­திரை வரி­யும் அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளன. நிரந்­த­ர­வா­சி­கள் இரண்­டா­வது வீட்டை வாங்­கும்­போது செலுத்த வேண்­டிய வரி 25 விழுக்­காட்­டில் இருந்து 30 விழுக்­காட்­டுக்­கும் மூன்­றா­வது வீட்­டுக்­கான வரி 30 விழுக்­காட்­டில் இருந்து 35 விழுக்­காட்­டுக்­கும் உயர்த்­தப்­பட்டு உள்­ளன.

தனி­யார் வீட்டு விலை­கள் இவ்­வாண்­டின் முத­லாம் காலாண்­டில் 3.2% உயர்ந்­தன. இது, முந்­திய காலாண்­டைக் காட்­டி­லும் 0.4% அதி­கம். 2022ஆம் ஆண்­டுக்­கான தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பார்த்­தால், புதிய நட­வ­டிக்கை எல்லா பரி­வர்த்­த­னை­க­ளி­லும் கிட்­டத்­தட்ட 10 விழுக்­காடு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று திரு லீ தெரி­வித்து உள்­ளார்.

"சொத்­துச் சந்தை தொடர்­பாக அடுத்­த­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக இங்கு வெளி­நாட்­ட­வர் மேற்­கொள்­ளும் சொத்­துப் பரி­வர்த்­தனை விகி­தம் பெரு­ம­ளவு குறைந்­து­விட்­டது.

"2011ஆம் ஆண்­டு­வாக்­கில் 20 விழுக்­கா­டாக இருந்த அந்த விகி­தம் கடந்த சில ஆண்­டு­க­ளாக 3 விழுக்­காட்­டுக்­கும் 4 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்ட அள­வில் சரிந்­து­விட்­டது. 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை­யி­லான சரா­சரி சொத்­துப் பரி­வர்த்­தனை விகி­தம் 6 விழுக்­காடு," என்று திரு லீ விளக்­கி­னார்.

இருப்­பி­னும், இவ்­வாண்­டின் முத­லாம் காலாண்­டில் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட எல்­லாப் பரி­வர்த்­த­னை­க­ளி­லும் குடி­யி­ருப்­புச் சொத்து வாங்­கிய வெளி­நாட்­ட­வர் விகி­தம் 7 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­தது, அவர்­க­ளின் முத லீட்டு ஆர்­வம் குறை­ய­வில்லை என்­ப­தையே உணர்த்­து­வ­தாக அவர் கூறி­னார்.