போலி தடுப்பூசி சான்றிதழ் மோசடி: ஆஸ்திரேலியருக்கு சிறை

போலி தடுப்பூசி சான்றிதழ் மோசடி: ஆஸ்திரேலியருக்கு சிறை

2 mins read
fc22e48e-30b5-4e6f-8f85-5c88405fab02
அமெ­ரிக்­கா­வின் லுவி­சி­யானா மாநி­லத்­தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஐந்து வயது இந்­திய வம்­சா­வ­ளிச் சிறு­மி­யைக் கொன்ற ஆட­வ­ருக்கு 100 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­துள்­ளன. படம்: பிக்ஸாபே -

தாமும் தமது மனை­வி­யும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக போலிச் சான்­றி­தழ் தயா­ரிக்க மருத்­து­வர் ஒரு­வ­ரு­டன் இணைந்து மோசடி செய்த குற்­றத்­திற்­காக ஆஸ்­தி­ரே­லிய ஆட­வர் ஒரு­வ­ருக்கு நேற்று சிங்­கப்­பூ­ரில் 16 வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

டேவிட் கிறிஸ்­டஃபர் நியூட்­டன், 44, எனப்­படும் அவ­ருக்கு 2021 டிசம்­பர் மாத­வாக்­கில் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள காமன்­வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்­தி­ரே­லியா என்­னும் வங்­கி­யில் வேலை கிடைத்­தது. ஆனால், அந்த வேலைக்கு அவர் ஆஸ்­தி­ரே­லியா செல்ல வேண்­டும்.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டி­ருந்­தால் மட்­டுமே ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் நுழைய முடி­யும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விருப்­பம் இல்­லாத அந்த ஆட­வர், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூ­சிக்கு எதி­ரான இயக்­கம் ஒன்­றின் மூலம் தாமஸ் சுவா செங் சூன் என்­னும் மருந்­தக உத­வி­யா­ளர் ஒரு­வ­ரு­டன் தொடர்­பு­கொண்­டார்.

தடுப்­பூசி போட்­ட­தாக சான்­றி­தழ் தயா­ரிக்க ஜிப்­சன் குவா எனும் மருத்­து­வ­ரு­டன் அந்த இரு­வ­ரும் இணைந்து மோச­டித் திட்­டம் ஒன்­றைத் தீட்­டி­னார்.

அதன்­படி குவா­வின் மருந்­த­கங்­களில் நியூட்­ட­னுக்­கும் அவ­ரது மனைவி வோங்­லங்கா அப்­னியா, 32, என்­ப­வ­ருக்­கும் 2021 டிசம்­பர் 29ஆம் தேதி முதல் போலி தடுப்­பூ­சி­யும் 2022 ஜன­வரி 15ஆம் தேதி இரண்­டா­வது போலி தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டன. அவ்­வி­ரு­வ­ருக்­கும் 'சினோ­ஃபார்ம்' தடுப்­பூசி என்ற பெயரில் ஊசி வழி­யா­க சாதா­ரண உப்பு கரை­சல் செலுத்­தப்­பட்­டது.

ஆனால், இந்த மோசடி பற்றி நியூட்­ட­னின் மனை­விக்கு எது­வும் தெரி­ய­வில்லை. உண்­மை­யா­கவே தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தாக அவர் கரு­தி­னார்.

போலி தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழுக்­காக மருத்­து­வ­ருக்கு $6,000 பணத்தை அந்த ஆட­வர் வழங்­கி­யது நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

மருத்துவர் குவாவும், 35, அவரது உதவியாளர் சுவாவும், 41, கைது செய்யப்பட்டனர்.

நியூட்டனுக்கு வழங்கியது போல மேலும் 16 பேருக்கு இந்த மருத்துவர் போலி தடுப்பூசி சான்றிதழ் வழங்கியது தெரிய வந்தது.