ரூபாயில் வர்த்தகம்: இந்திய அரசு மும்முரம்

ரூபாயில் வர்த்தகம்: இந்திய அரசு மும்முரம்

2 mins read

உலக அள­வில் வர்த்­த­கம் மெது­வ­டைந்து உள்­ளது. இந்­தச் சூழ­லில், இந்­தியா தன்­னு­டைய ஏற்று மதி­களை அதி­க­ரிக்க ஏது­வாக தனது ரூபாய் நாண­யத்­தில் வர்த்­த­கம் நடப்­ப­தற்­கான முயற்­சி­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

ரூபாய் நாண­யத்தை அனைத்­து­ல­க­ம­ய­மாக்க இந்­தியா எடுத்து வரும் முயற்­சி­க­ளுக்கு ஊக்­கு­விப்­பாக இந்­தி­யா­வும் பங்­ளா­தே­ஷும் ரூபா­யைப் பயன்­ப­டுத்த கொள்கை அள­வில் இணங்கி இருக்­கின்­றன.

அமெ­ரிக்க டால­ரின் தேவை­களைக் குறைத்­துக்­கொண்டு இந்­திய ஏற்­று­ம­தி­களை அதி­கப்­ப­டுத்­து­வது நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உல­கி­லேயே ஆக வேக­மாக வளர்ந்து வரும் பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு­களில் ஒன்­றான இந்­தியா, கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளி­நாட்டு வர்த்­த­கக் கொள்கை 2023ஐ வெளி­யிட்­டது.

அனைத்­து­லக பரி­வர்த்­த­னை­களில் ரூபாய் நாண­யத்­தைப் பயன்­ப­டுத்­து­வது அந்­தக் கொள்­கை­யின் மிக முக்­கி­ய­அம்­சம். உலக வர்த்­த­கம் மெது­வ­டைந்­துள்­ள­தால் சில நாடுகளுக்கு அமெ­ரிக்க டாலர் கிடைப்­பது சிர­ம­மாகி உள்­ளது.

அந்த நாடு­க­ளு­டன் தன் நாண­யத்­தைக் கொண்டு வர்த்­த­கத்­தில் ஈடு­பட இந்­தியா தயா­ராக இருப்­ப­தாக இந்திய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

உலக வர்த்­தக மதிப்பு சென்ற ஆண்­டில் US$32 டிரி­ல்லி­யன் ஆக (S$42 டிரி­ல்லி­யன்) இருந்­தது. ஆனால் இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் வர்­த­த­கம் தேக்க மடை­யும் என்று தெரி­கிறது.

புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், பண­வீக்­கம் பற்­றிய கவ­லை­கள், எரி­சக்தி, உணவு, உலோ­கப் பொருள்­க­ளின் விலை அதி­க­ரிப்பு ஆகி­யவை கார­ண­மாக உலக வளர்ச்சி நில­வ­ரங்­கள் சரி­யில்லை என்று ஐநா வர்த்­தக, வளர்ச்சி மாநாட்டு அமைப்­பின் 'உலக வர்த்­தக புது நில­வ­ரங்­கள்' என்ற அறிக்கை தெரி­வித்­தது.

இந்­தி­யா­வு­டன் கூடிய இணக்­கம் பற்றி டாக்கா நக­ரில் இருந்து கருத்து தெரி­வித்த பங்­ளா­தேஷ் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­நரும் பேச்­சா­ள­ரு­மான மெஸ்­பால் ஹேக், அந்த இணக்­கம் கார­ண­மாக இரு நாடு­க­ளின் வர்த்­த­கர்­ க­ளுக்­கும் நன்மை கிடைக்­கும் எனக் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

ரூபாய் வர்­த்தக ஏற்­பாடு நடை­மு­றைக்கு வர இரண்டு மாதங்­கள் பிடிக்­கும் என்ற அந்த அதி­காரி, வர்த்­த­கர்­கள் முத­லில் மத்­திய வங்­கி­யின் அனு­ம­தி­யைப் பெற்று கணக்­குத் திறக்க வேண்­டும் என்று விளக்­கி­னார்.

இந்­தியா-பங்­ளா­தேஷ் வர்த்­தக மதிப்பு, 2021-22ஆம் ஆண்­டில் US$18.2 பில்­லி­ய­னாக இருந்­தது.

இந்­திய நாண­யத்­தில் வர்த்­த­கம் நடை­மு­றைக்கு வர­வேண்­டு­மா­னால் பங்­ளா­தேஷ் வங்­கி­கள் இந்­திய வங்­கி­க­ளு­டன் ரூபாய் கணக்கு ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்­டும். அதே­போல் இந்­திய வங்­கி­களும் செய்ய வேண்­டும்.

அந்­தக் கணக்­கு­க­ளின் மூல­மா­கத்­தான் இந்­திய வர்த்­த­கர்­கள் ரூபா­யில் பணத்­தைப் பெற, அனுப்ப முடி­யும். பங்­ளா­தேஷ் வர்த்­த­கர்­கள் தங்­கள் டாகா நாண­யத்தை வர்த்­த­கத்­திற்­குப் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்­தி­யா­வு­டன் கூடிய வர்த்த கத்­தில் ரூபாய் நாண­யத்­தைப் பயன்­ப­டுத்த ஏற்­கெ­னவே மலே­சியா ஒப்­புக்கொண்­டுள்­ளது.