தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியா: பிந்தானுக்குச் சென்ற படகு மூழ்கி 11 பேர் பலி

1 mins read
7d8704b5-b9ea-4f67-8d20-434d9d85e7ea
-

இந்­தோ­னீ­சி­யா­வின் சுமத்ரா தீவுக்கு கிழக்கே படகு ஒன்று கட­லில் மூழ்­கி­ய­தில் குறைந்­த­பட்சம் 11 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஒரு­வ­ரைக் காண­வில்லை என்று அந்த நாட்­டின் தேசிய தேடி மீட்பு அமைப்பு 'பசார்­னாஸ்' நேற்று தெரி­வித்­தது.

மீட்­புப் பணி­யா­ளர்­கள் 62 பேரை உயி­ரோடு மீட்­ட­னர். அந்தச் சம்­ப­வத்­தில் மாண்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் மாதர்­களும் சிறார்­களும் ஆவர்.

மேற்கு ரியாவ் மாநி­லத்­தின் கட­லோ­ரப் பகு­தி­யில் வியா­ழக்­கிழமை பிற்­ப­கல் நேரத்­தில் படகு மூழ்­கி­விட்­டது என்று பசார்­னாஸ் அமைப்­பின் பேச்­சா­ள­ரான குக்கூ விடோடோ கூறி­னார்.

அந்­தப் பட­கில் 74 பேர் இருந்­த­னர். 62 பேர் உயிர்­பி­ழைத்­து­விட்­ட­னர். 11 பேர் மாண்­டு­விட்­ட­னர். ஒரு­வ­ரைக் காண­வில்லை. அவர் இன்­ன­மும் தேடப்­பட்டு வரு­கி­றார் என அந்­தப் பேச்­சா­ளர் கூறினார்.

அந்த வேகப் படகு பிந்­தான் தீவில் இருக்­கும் தஞ்­சோங் பினாங்கு நக­ருக்­குச் சென்று கொண்­டி­ருந்­தது.

வழி­யில் தெம்­பி­ல­கான் துறைமு­கத்­தில் இருந்து புறப்­பட்ட சிறிது நேரத்­தில் படகு விபத்­துக்­குள்­ளா­கி­விட்­டது.

கரையில் இருந்து 198 கி.மீ. தொலை­வில் விபத்து நிகழ்ந்­தது.

விபத்­துக்­கான கார­ணங்­கள் இன்­ன­மும் தெரி­ய­வில்லை என்று அந்த அதி­காரி குறிப்­பிட்­டார். புலன்விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.