பருவநிலை மாற்றம்: இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம்

பருவநிலை மாற்றம்: இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம்

1 mins read

பரு­வ­நிலை மாற்­றத்­தால் இந்­தி­யா­வில் புதிய நோய்த்­தொற்­று­கள் ஏற்­படும் அபா­யம் உள்­ள­தாக சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். நாட்­டின் சில பகுதி­களில் அண்­மை­யில் ஏற் பட்ட பற­வைக் காய்ச்­சல், பரு­வ­காலக் காய்ச்­சல் தொடர்­பான ஆய்­வில் ஈடு­பட்டு வரும் நிபு­ணர்­கள், பரு­வ­நிலை மாற்­றம்­தான் இதற்கு கார­ணம் எனத் தற்­போ­தைய நிலை­யில் உறு­தி­யா­கக் கூறமுடி­யாது. ஆனால், மறுக்­க­வும் இய­லாது எனக் கூறியுள்ளனர்.

வெப்­ப­நிலை தொடர்ந்து அதி­க­ரிப்­பது, தீநுண்­மி­கள் உள்ளிட்ட நோய்ப் பரப்­பி­க­ளின் வளர்ச்­சி­யை­யும் செயல்­பாட்­டை­யும் மாறு­ப­டுத்­து­கிறது. அது நோய்ப் பர­வல் அபா­யத்­தை­யும் அதி­க­ரிக்­கிறது. வெப்­ப­மான, ஈரப்­பத சூழ­லா­னது நோய்ப் பரவல் வழி­களை அதி­க­ரிப்­ப­தோடு பர­வல்தன்மை, தீவி­ரத்­தை­யும் அதி­க­ரிக்­கிறது.

பல விலங்­கி­னங்­களில் தற்­போது சுமார் 10,000 தீநுண்­மி­கள் (கிருமி/நுண்நஞ்சு) அமை­தி­யாக உலவி வரு­கின்­றன. பரு­வ­நிலை மாற்­றத்­தால் அவை தீவி­ர­மடைந்து மனி­தர்­க­ளுக்­கு பரவும் அபா­யம் காணப்­ப­டு­கிறது. மேலும், அதி­க­ரித்துள்ள குளிர்­சா­த­னப் பயன்­பாடு, பயிர் சுழற்­சி­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­றம், மக்­க­ளின் பெரும் இடப்­பெ­யர்ச்சி உள்­ளிட்­ட­வை­யும் நோய்ப் பரவல் அபா­யத்தை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது என்­ற­னர் நிபுணர்கள்.