தென்கிழக்காசிய விளையாட்டுகள்: தொடக்க ஆட்டத்தில் சிங்கப்பூர் குழுவை ஆட்டங்காண வைத்தது தாய்லாந்து

தென்கிழக்காசிய விளையாட்டுகள்: தொடக்க ஆட்டத்தில் சிங்கப்பூர் குழுவை ஆட்டங்காண வைத்தது தாய்லாந்து

1 mins read
0458caa4-267c-4bf5-af09-52ef2859cf57
-

மெர்­ல­யன் கிண்­ணப் போட்­டி­யின் இறுதி ஆட்­டத்தை அடுத்து கடந்த மார்ச் மாதம் 22 வய­துக்­குக் கீழ் உள்ள வீரர்­கள் அடங்­கிய சிங்­கப்­பூர் காற்­பந்­துக் குழு, கடைசி நிலைக்­குத் தள்­ளப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் ஃபிலிப்பே ஆவ் தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூர் அணி அரை­யிறு­திக்­குத் தகு­தி­பெ­றும் என்ற எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஈடு­கொ­டுப்­பது சந்­தே­கம்­தான் என்­ப­து­போல் பேசி­னார்.

அவர் அப்­போது கூறி­யதை அப்­ப­டியே நம்­ப­லாமா என்­றி­ருந்த காற்­பந்து ரசி­கர்­கள், நேற்று சிங்­கப்­பூர் அணி தாய்­லாந்­தி­டம் 3-1 என்ற கோல் கணக்­கில், தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யின் 'பி' பிரிவு முதல் ஆட்­டத்­தில், தோற்­ற­பின் அவர் கூறி­ய­தன் உண்­மைப் பொரு­ளைப் புரிந்­து­கொண்­டி­ருப்­பர்.

விளை­யாட்­டுப் போட்­டி­க­ளின் தொடக்க ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் அணி தோற்­றி­ருப்­பது இது நான்­கா­வது முறை­யா­கும்.

தாய்­லாந்து அணி கிடைத்த பல வாய்ப்­பு­களை வீண­டிக்­கா­மல் இருந்­தி­ருந்­தால் இன்­னும் அதிக கோல் எண்­ணிக்­கை­யில் சிங்­கப்­பூர் அணி தோற்­றி­ருக்­கக்­கூ­டும் என்று செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

நாளை மறு­நாள் சிங்­கப்­பூர் அணி வியட்­னா­மைச் சந்­திக்க உள்­ளது.