உலகப் பொருளியல் மன்றம்: ஐந்தாண்டுகளில் 14 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும்

உலகப் பொருளியல் மன்றம்: ஐந்தாண்டுகளில் 14 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும்

2 mins read

அடுத்த ஐந்­தாண்­டு­களில் உல­கில் 14 மில்­லி­யன் வேலை­கள் இல்­லா­மல் போய்­வி­டும் என்று உல­கப் பொரு­ளி­யல் மன்­றத்­தின் 'எதிர்­கால வேலை­கள் 2023' ஆய்­வு அ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

இது, உல­கின் இப்­போ­தைய வேலை­களின் எண்­ணிக்­கை­யில் இரண்டு விழுக்­காடு.

வரும் 2027ஆம் ஆண்­டிற்­குள் புதி­தாக 69 மில்­லி­யன் வேலை­கள் உரு­வாக்­கப்­படும் என்­றும் அதே நேரத்­தில் 83 மில்­லி­யன் வேலை­கள் ஒழிந்­து­போ­கும் என்­றும் அந்த ஆய்­வ­றிக்கை கூறு­கிறது.

கிட்டத்தட்ட நான்­கில் ஒரு வேலை, அதா­வது 23 விழுக்­காடு வேலை­கள் அடுத்த ஐந்­தாண்­டு­களுக்­குள் உரு­மாற்­றம் காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வைப் பொறுத்­த­மட்­டில், அவ்விகிதம் 22 விழுக்­காடாக இருக்­கும்.

தொழில்­நுட்­ப­மும் மின்­னி­லக்­க­ம­ய­மா­த­லுமே வேலை உரு­வாக்­கத்­திற்­கும் அழிப்­பிற்­கும் முதன்­மை­யான கார­ணி­க­ளா­கத் திக­ழும் என்று அவ்­வ­றிக்கை குறிப்­பி­டு­கிறது.

வங்­கிக் காசா­ளர்­கள் போன்ற செய­லக, எழுத்­துப் பணி­கள் விரை­வில் தானி­யக்­க­ம­ய­மாக்­கப்­படும் என்­றும் செயற்கை நுண்­ண­றிவு, இணை­யப் பாது­காப்பு போன்ற துறை­க­ளைச் சேர்ந்த வல்­லு­நர்­களுக்­கான தேவை பெரு­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நான்­கா­வது முறை­யாக இடம்­பெற்ற இந்­தக் கருத்­தாய்­வில் மொத்­தம் 803 நிறு­வ­னங்­கள் பங்­கு­பெற்­றன; 673 மில்­லி­யன் வேலை­கள் குறித்த தர­வு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

பத்­தில் ஆறு ஊழி­யர்­களுக்கு 2027ஆம் ஆண்­டிற்­குள் பயிற்சி தேவைப்­படும் என அறிக்கை கூறு­கிறது. தங்கள் ஊழி­யர்­களின் பயிற்­சிக்­காக 45 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் நிதி­யு­த­வியை எதிர்­பார்க்­கின்­றன.

7,800 வேலைகளுக்கு

ஆளெடுப்பு நிறுத்திவைப்பு

இதற்­கி­டையே, வரும் ஆண்­டு­களில் 7,800 வேலை­க­ளுக்கு ஆளெ­டுப்­பது நிறுத்­தப்­ப­ட­லாம் என்­றும் அவ்­வே­லை­கள் செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பத்­தின் துணை­யு­டன் மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்­றும் எதிர்­பார்ப்­ப­தாக ஐபி­எம் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி அர­விந்த் கிருஷ்ணா தெரி­வித்­துள்­ளார்.

மனி­த­வ­ளம் போன்ற அலு­வ­ல­கப் பிரி­வு­களில் ஆட்­சேர்ப்பு நட­வடிக்­கை­கள் நிறுத்­தப்­படும் அல்­லது மெது­வ­டை­யும் என்று திரு கிருஷ்ணா கூறி­ய­தாக `புளூம்­பெர்க்' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

வாடிக்­கை­யா­ளரை நேர­டி­யாகச் சந்­திக்­கத் தேவை­யிராத பணி­களில் 30 விழுக்­காடு, அடுத்த ஐந்­து ஆண்­டு­களில் செயற்கை நுண்­ண­றிவு, தானி­யக்­கத் தொழில்­நுட்­பங்­கள்­வழி மேற்­கொள்­ளப்­படும் என்­றும் திரு கிருஷ்ணா குறிப்­பிட்­டுள்­ளார்.