குழந்தை மரணம்: கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதி

குழந்தை மரணம்: கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதி

1 mins read
b99f2098-3256-4f76-88e5-25508c4a8190
-

ஜோகூ­ரில் கடந்த வாரம் மர­ண­மடைந்த நான்கு வயது சிறு­வன் தொடர்­பாக அக்­கு­ழந்­தை­யின் தாய்­மீ­தும் வளர்ப்­புத் தந்­தை­மீ­தும் துன்­பு­றுத்­தல் குற்­றம் சுமத்­தப்­பட்டு இருந்­தது.

நாகேந்­தி­ரன், 23, ஏ.சங்­கீதா, 23, ஆகிய இரு­வ­ரும் நேற்று நீதி­மன்­றத்­தில் அந்­தக் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­னர்.

தாமான் ஸ்கூ­டாய் பாரு­வில் ஜாலான் அமா­னில் உள்ள ஸ்கூ­டாய் வில்லா அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் ஏப்­ரல் 28ஆம் தேதி நள்­ளி­ர­வில் குழந்­தையை இவ்­வி­ரு­வ­ரும் உடல் ரீதி­யாகக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது.

விடிந்­த­தும் சுல்­தானா அமினா மருத்­து­வ­மனை அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட குழந்தை உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக காலை 8.20 மணி­ய­ள­வில் அறி­விக்­கப்­பட்­ட­து. இஸ்­கந்­தார் புத்­திரி காவல்­து­றைத் தலை­வ­ரும் துணை ஆணை­ய­ரு­மான ரஹ்­மத் அரி­ஃபின் இத்தகவலைக் கூறி­னார்.

குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அன்று பிற்­ப­கல் 1 மணி­ய­ள­வில் தம்­ப­தி­யர் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது குழந்­தை­யின் தலை, வயிறு, கால்­கள் மற்­றும் காது­க­ளின் பின்­பு­றத்­தில் காயங்­கள் இருந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

கைது செய்­யப்­பட்ட குழந்­தை­யின் தாயான சங்­கீதா தற்­போது கர்ப்­பி­ணி­யாக உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் இரு­வ­ருக்­கும் 20 ஆண்டு வரை­யிலான சிறைத் தண்­ட­னை­யும் 50,000 ரிங்­கிட் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். அடுத்­த­கட்ட விசா­ரணை ஜூன் 7ல் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.