பூனை வளர்க்க அனுமதி கிட்டலாம்: மூத்த துணையமைச்சர் டான்

பூனை வளர்க்க அனுமதி கிட்டலாம்: மூத்த துணையமைச்சர் டான்

fallback

07 May 2023 - 5:30 am

2 mins read

சிங்­கப்­பூ­ரின் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் (வீவக) குடி­யி­ருப்­பு­களில் செல்­லப்­பி­ரா­ணி­க­ளா­கப் பூனை­களை வளர்ப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டக்­கூ­டும்.

இருப்­பி­னும் பொதுச் சுகா­தா­ரத்­தைப் பாது­காப்­பது முக்­கி­யம் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை­ய­மைச்­சர் டான் கியட் ஹாவ் கூறி­யி­ருக்­கி­றார்.

பூனை­கள் மூலம் 'ரேபிஸ்' தொற்­று­வி­யாதி பர­வு­வ­தைத் தடுக்க வேண்­டும் என்­றார் அவர்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் நேற்று நடை­பெற்ற 'பெட்ஸ் டே அவுட்' எனும் செல்­லப்­பி­ரா­ணி­க­ளுக்­கான நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அவர் உரை­யாற்­றி­னார்.

விலங்­கு­நல மருத்­து­வச் சேவை­யான 'ஏவி­எஸ்' அண்­மை­யில் நடத்­திய கருத்­தாய்­வின் முடி­வு­களை அவர் தமது உரை­யில் தெரி­வித்­தார்.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து நவம்­பர் மாதம் வரை அந்­தக் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது.

அதில் 30,000க்கு மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

அவர்­களில் கிட்­டத்­தட்ட 90 விழுக்­காட்­டி­னர் பூனை­க­ளைச் செல்­லப்­பி­ரா­ணி­க­ளாக வீவக வீடு­களில் வளர்ப்­ப­தற்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

பூனை­கள் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களை அசுத்­தப்­ப­டுத்­து­வ­தால் சிலர் அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

அடுத்த மாதம் முதல் இதன் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டல்­கள் நடத்­தப்­படும் எனக் கூறப்­பட்­டது.

பூனை வளர்ப்­போர், பூனை வளர்க்­கா­தோர், வீதி­களில் உள்ள பூனை­க­ளைப் பரா­ம­ரிப்­போர், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், விலங்­கு­நல ஆர்­வ­லர் குழு உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்­டோர் அந்­தக் கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கு­பெ­று­வர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் 1960ஆம் ஆண்­டில் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­களில் வசிக்­கத் தொடங்­கி­ய­தில் இருந்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் விலங்­கு­க­ளை­யும் பற­வை­க­ளை­யும் வளர்க்­கத் தடை விதிக்­கப்­பட்­டது.

பின்­னர் நாய், சிறிய விலங்­கு­கள் போன்­ற­வற்­றுக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டா­லும் பூனை­க­ளுக்கு அந்­தத் தடை இன்­றும் நடப்­பில் உள்­ளது.

பூனை­க­ளுக்கு 'ரேபிஸ்' நோய்த்­தொற்று ஏற்­ப­டக்­கூ­டும். அவற்­றி­ட­மி­ருந்து அது மனி­தர்­க­ளுக்­கும் பர­வக்­கூ­டும் என்­கின்­ற­னர் மருத்­துவ வல்­லு­நர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் 1953 முதல் பூனை­க­ளி­ட­மி­ருந்து மனி­தர்­க­ளுக்­குப் பர­வக்­கூ­டிய 'ரேபிஸ்' நோய் யாரை­யும் தொற்­ற­வில்லை என்­ப­தைத் தமது உரை­யில் குறிப்­பிட்ட திரு டான், அதனை மெத்­த­ன­மாக எடுத்­துக்­கொள்ள இய­லாது என்­பதை வலி­யு­றுத்­தி­னார்.

'ஏவி­எஸ்' கருத்­தாய்­வில் பங்­கு­பெற்ற பெரும்­பா­லா­னோர் பூனை­க­ளுக்கு தொடர்­புத்­த­டம் கண்­ட­றிய உத­வும் 'மைக்­ரோ­சிப்' சில்­லு­க­ளைப் பொருத்­து­தல், முதல்­முறை செல்­லப்­பி­ராணி வளர்ப்­போர் அடிப்­படை அம்­சங்­க­ளுக்­கான பயிற்சி எடுப்­ப­தைக் கட்­டா­ய­மாக்­கு­தல் போன்­ற­வற்­றைப் பரிந்­து­ரைத்­த­னர்.

மொத்­தத்­தில் அக்­கம் பக்­கத்­தி­ன­ருக்கு தொந்­த­ரவு தராத வகை­யில் பூனை வளர்ப்­போர் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் என்று மூத்த துணை­ய­மைச்­சர் டான் கியட் ஹாவ் வலி­யு­றுத்­தி­னார்.

வீதி­களில் வசிக்­கும் பூனை­க­ளுக்கு இனப்­பெ­ருக்­கக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு கருத்­தாய்­வில் கலந்­து­கொண்ட பெரும்­பா­லோர் ஆத­ரவு தெரி­வித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

பொது­மக்­கள் தங்­கள் கருத்­து­களை https://go.gov.sg/avs-cat-management என்ற இணை­யத்­தள முக­வரி மூலம் பகிர்ந்­து­கொள்­ள­லாம்.