மறுசுழற்சியை அதிகரிக்க லிம் சூ காங்கில் மேம்பாடு

சிங்­கப்­பூ­ரில் மறு­சு­ழற்­சி­யின் அள­வைக் கூட்­டு­வ­தற்­காக லிம் சூ காங் மறு­சு­ழற்சி நிலை­யத்தை மேம்­ப­டுத்­து­வது பற்றி அதி­கா­ரி­கள் ஆய்வு செய்து வரு­வ­தாக ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அறி­கிறது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பெரும்­பா­லான மறு­சு­ழற்­சிக் கூடங்­களின் மொத்த உரு­வ­மாக லிம் சூ காங்­கின் சரிம்­புன் மறு­சுழற்சி நிலை­யம் திகழ்­கிறது. இந்­நி­லை­யத்தை மறு­மேம்­பாடு செய்து அதிக நிலப் பகு­தியை மறு­சு­ழற்­சிக்­குப் பயன்­ப­டுத்­தும் உத்­தே­சத் திட்­டம் குறித்து ஆராய தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஏலக்­குத்­த­கைக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

30 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்ள சரிம்­புன் மறு­சுழற்சி நிலை­யம் சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த மறு­சு­ழற்­சி­களில் ஐந்­தில் ஒரு பகு­தியை கையாள்­கிறது. கட்­டு­மா­னக் கழி­வு­கள், மரக்­க­ழி­வு­கள், தோட்­டக்­க­லை­யில் வீணா­கும் பொருள்­கள் ஆகி­ய­வற்றை இந்த நிலை­யம் மறு­சு­ழற்சி செய்து பய­னுள்ள பொருள்­களை உரு­வாக்­கு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் இத­ரக் கழி­வு­களை துவாஸ், ஜூரோங் மற்­றும் சுங்கை காடுட்­டில் அமைந்­துள்ள வேறு சில மறு­சு­ழற்சி நிலை­யங்­கள் கையாள்­கின்­றன.

மறு­சு­ழற்சி நடை­முறை என்­பது பல்­வேறு பணி­களை உள்­ள­டக்­கி­யது. வெட்டி, நசுக்கி, உடைத்த பின்­னர் அவற்­றைச் சேமித்து வைக்க பெரிய அள­வி­லான இடம் தேவைப்­படும். மேலும் எளி­தில் தீப்­பற்­றக்­கூ­டிய இட­மாக அது இருக்­கக்­கூ­டாது என்று வாரி­யத்­தின் ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­களில் குறிப்­பிடப்­பட்டு உள்­ளது.

மறு­சு­ழற்சி நிலை­யத்­தின் உள்­கட்­ட­மைப்பு மற்­றும் வச­தி­களை மேம்­ப­டுத்­து­வது குறித்து ஆராய விரும்­பு­வ­தாக ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்­தித்­தாளி­டம் வாரி­யம் தெரி­வித்­தது.

இயன்­ற­வரை கூடு­தல் இடங்­களை மறு­சு­ழற்­சிக்­குப் பயன்­படுத்­து­வது குறித்­தும் கவ­னம் செலுத்த அது விரும்­பு­கிறது. பேர­ள­வி­லான பிளாஸ்­டிக் கழிவு­களை மறு­சு­ழற்சி செய்­வ­தை­யும் அத­னு­டன் இணைப்­பது அதன் நோக்­கம்.

மறு­மேம்­பாடு செய்­யப்­பட்ட நிலை­யம் 2029ஆம் ஆண்டு இறு­தி­வாக்­கில் தயா­ரா­கி­வி­டும் என வாரி­யம் எதிர்­பார்க்­கிறது. இந்த நிலை­யத்தை நிர்­வ­கிக்­கும் பொறுப்பை வாரி­யம் ஏற்­கும் நிலை­யில் அது சிறு சிறு பகுதி­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு மறு­சு­ழற்சி நிறு­வ­னங்­க­ளுக்­குக் குத்­த­கைக்கு விடப்­படும்.

உள்­ளூர் மறு­சு­ழற்­சித் திறன்­களை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­களின் ஒரு பகு­தி­யா­க­வும் ‘சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030’ன்கீழ் தேசிய கழி­வுக் குறைப்பு இலக்­கு­களை எட்­ட­வும் இந்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மேலும், 2030ஆம் ஆண்டு வாக்­கில் தேசிய மறு­சு­ழற்சி விகி­தத்தை 70 விழுக்­காட்­டுக்­கு உயர்த்த வகுக்­கப்­பட்டு இருக்­கும் ‘கழி­வு­க­ளற்ற பெருந்­திட்­டத்­தின்’ ஒரு பகு­தி­யா­க­வும் இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

செமக்­காவ் குப்பை நிரப்­பு­மிடத்­திற்கு அனுப்­பப்­படும் கழிவு­களை ஒரு நாளைக்கு ஒரு நப­ருக்கு 30% என்ற விகி­தத்­தில் குறைக்­க­வும் வாரி­யம் எண்­ணி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த மறு­சு­ழற்சி 2021ஆம் ஆண்­டை­விட 2022ல் இரண்டு விழுக்­காடு அதி­க­ரித்­தது. அதா­வது, 55 விழுக்­காட்­டில் இருந்து 57 விழுக்­காட்­டுக்கு அது கூடி­யது. கட்­டு­மா­னக் கழி­வு­கள் மற்­றும் இடிக்­கப்­பட்ட பொருள்­கள் கிட்­டத்­தட்ட 99% கடந்த ஆண்டு மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­டன.

அதே­போல துண்­டிக்­கப்­பட்ட மரக்­கி­ளை­கள், அழ­கு­ப­டுத்த வெட்­டப்­பட்ட செடி­க­ளின் பாகங்­கள் போன்ற தோட்­டக்­க­லைப் பொருள்­களில் 85 விழுக்­காடு மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­டன.

பிளாஸ்­டிக் பொருள்­க­ளின் மறு­சு­ழற்சி அளவை அதி­க­ரிப்­பது குறித்­தும் வாரி­யம் யோசித்து வரு­கிறது.

கடந்த ஆண்டு வெறும் 6 விழுக்­காடு பிளாஸ்டிக் பொருள்­கள் மட்­டுமே மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­டன. எஞ்­சிய 924,000 டன் பொருள்­களும் எரித்துச் சாம்­ப­லாக்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!