புறச்சூழல் சரியில்லை என ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ எச்சரிக்கை ஆசியானுக்கு ஐக்கியம் முக்கியம்

புறச்சூழல் சரியில்லை என ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ எச்சரிக்கை ஆசியானுக்கு ஐக்கியம் முக்கியம்

3 mins read
545da650-87de-49ff-99a7-467ac5e1b437
-

லாபு­வான் பாஜோ­வி­லி­ருந்து எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன் மின்­னி­லக்க ஆசி­ரி­யர்

கவ­லைக்­கு­ரிய உல­கச் சூழ­லில் ஆசி­யான் ஐக்­கி­யம் முக்­கி­யம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் ஆசி­யான் நாடு­கள் ஒன்­று­டன் ஒன்று நன்கு ஒத்­து­ழைத்­த­தைச் சுட்­டிய திரு லீ, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து உல­கம் மீண்டு வந்­தா­லும், உல­கச் சூழ்­நிலை சிக்­கல் நிறைந்­த­தாக ஆகி­வ­ரும் நிலை­யில், ஆசி­யான் தொடர்ந்து வட்­டார ஒன்­றி­ணைப்பு முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் லாபு­வான் பாஜோ நக­ரில் நேற்­றும் இன்­றும் நடை­பெ­றும் 42வது ஆசி­யான் இரு­நாள் உச்­ச­நிலை மாநாட்­டில் பிர­த­மர் லீ நேற்று உரை­யாற்­றி­னார்.

பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்பே எப்­போ­தும் ஆசி­யா­னின் முன்­னு­ரி­மை­யாக இருக்க வேண்­டும் என்ற அவர், ஆசி­யான் தனது பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­பு­களை மேலும் வலுப்­படுத்த வேண்­டும் என்­றார்.

இந்­தோ­னீ­சியா உரு­வாக்­கும் ஆசி­யான் மின்­னி­லக்க பொரு­ளி­யல் கட்­ட­மைப்பு உடன்­பாட்­டுக்கு சிங்­கப்­பூர் வலு­வான ஆத­ரவை அளிக்­கிறது. மக்­க­ளின் மின்­னி­லக்க இணைப்­பு­க­ளை­யும் எழுத்­த­றி­வை­யும் மேம்­ப­டுத்­து­வ­தால் ஏரா­ள­மான பொரு­ளி­யல் நன்­மை­க­ளைப் பெற­லாம் என்­றார் திரு லீ.

பசு­மைப் பொரு­ளி­யல் பற்­றிக் குறிப்­பிட்ட அவர், இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­மைத்­து­வத்­தில் எரி­சக்தி இணைப்­பு­களை வலுப்­ப­டுத்­தப்­ப­டு­வதை சிங்­கப்­பூர் ஆத­ரிக்­கிறது என்­றார்.

பல­த­ரப்பு எரி­சக்தி பரி­வர்த்­தனை வட்­டா­ரத்­தில் சாத்­தி­யம் என்­ப­தற்கு லாவோ பிடி­ஆர்-தாய்­லாந்து-மலே­சியா-சிங்­கப்­பூர் எரி­சக்தி ஒருங்­கி­ணைப்­புத் திட்­டத்தை அவர் உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார்.

"ஆசி­யான் உறுப்­பி­னர்­க­ளின் எரி­சக்தி பாது­காப்­பை­யும் மீள்­தி­றனை வலு­வாக்­க­வும் வட்­டார கரிம வெளி­யீட்டை குறைக்­கும் முயற்­சி­க­ளின் முன்­னேற்­றத்­துக்­கும், ஆசி­யான் எரி­சக்­திக் கட்­ட­மைப்பை உரு­வாக்­க­வேண்­டும்," என்­றார் பிர­த­மர் லீ.

ஆசி­யான்-ஆஸ்­தி­ரே­லியா-நியூ­சி­லாந்து தாராள வர்த்­த­கப் பகுதி, ஆசி­யான்-சீனா தாராள வர்த்­த­கப் பகுதி ஆகி­யவை குறித்த முயற்­சி­கள் அடுத்த கட்­டத்தை எட்­டி­யுள்­ள­தைக் குறிப்­பிட்ட அவர், இரண்டாவது மேம்­பாட்டு அம்­சங்­களில் மின்­னி­லக்­கம், பசு­மைப் பொரு­ளி­யல்­கள், விநி­யோ­கச் சங்­கிலி இணைப்பு போன்ற புதிய பகுதி­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சொன்­னார்.

பொரு­ளி­ய­லுக்கு அப்­பால், ஆசி­யான் நாடு­க­டந்த பிரச்­சி­னை­க­ளி­லும் இணை­யப்­பா­து­காப்­பி­லும் ஒத்­து­ழைப்பை அதி­க­ரிக்க வேண்­டும். பெருகி வரும் அதி­ந­வீன எல்லை தாண்­டிய அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து வட்­டார மக்­க­ளைப் பாது­காப்­ப­தும் அதில் அடங்­கும் என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

மாநாட்­டில் விவா­திக்­கப்­படும் முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக ஆள் கடத்­தல் உள்­ளது. ஆள் கடத்­தல் எதிர்ப்­புக்­கான இந்­தோ­னீ­சி­யா­வின் முயற்­சியை சிங்­கப்­பூர் ஆத­ரிக்­கிறது என்­றார் திரு லீ.

ஆசி­யா­னில் ஒத்­து­ழைப்பை ஆழ­மாக்­கு­வ­தற்கு வலு­வான அர­சி­யல் ஆத­ரவு தேவை என்ற பிர­த­மர் லீ, தலை­வர்­கள் ஒற்­று­மை­யாக இருக்­க­வும், ஆசி­யா­னின் எதிர்­கா­லத்­திற்­கான ஒன்­று­பட்ட இலக்கை ஏற்­றுக்­கொள்­ள­வும் அழைப்பு விடுத்­தார்.

மாநாட்­டின் முக்­கிய அம்சமாக திமோர் லெஸ்டே ஆசி­யா­னின் 11ஆம் உறுப்­பி­ன­ராக சேர்­வ­தற்­கான திட்­டம் முன்­வைக்­கப்­பட்­டது. அத்­திட்­டத்­தில் திமோர் லெஸ்டே நிறை­வேற்ற வேண்­டிய கட­மை­களும் கடப்­பா­டு­களும் இடம்­பெ­று­கின்­றன.

திமோர் லெஸ்டே பிர­தமர் தவூர் மாத்­தான் ருவாக், வியட்­நாம் பிர­த­மர் ஃபாம் மின் சின், லாவோஸ் பிர­த­மர் சொனேக்சே சைஃபான்­டோனே ஆகி­யோ­ருடன் பிர­த­மர் லீ சந்­திப்­பு­களை நடத்­தி­னார்.

ஆசி­யான் வட்­டா­ரத்­தில் அமை­தியை நிலை­நாட்ட ஆசியான் பங்­க­ளிக்­க­வேண்­டும் என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ தமது தொடக்க உரை­யில் கேட்­டுக்­கொண்­டார். இவ்­வாண்டு ஆசி­யா­னின் தலை­மைத்­து­வப் பொறுப்பை வகிக்­கும் இந்­தோ­னீ­சியா, அமை­தி­யான முறை­யில் மியன்­மா­ரின் ராணு­வம், அர­சாங்­கம், ஆயு­த­மேந்­திய இனக் குழுக்­கள் ஆகி­யோ­ரு­டன் இணைந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.