'சீ' காற்பந்து: 1971க்குப் பிறகு மோசமான தோல்வியைச் சந்தித்த சிங்கப்பூர்

'சீ' காற்பந்து: 1971க்குப் பிறகு மோசமான தோல்வியைச் சந்தித்த சிங்கப்பூர்

1 mins read
17039251-1568-4447-917f-895601739d2d
-

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் 1971க்குப் பிறகு சந்­திக்­காத படு­தோல்­வி­யை சிங்­கப்­பூர் காற்­பந்­துக் குழு சந்தித்துள்ளது.

நோம்பென்னில் நேற்று மாலை நடந்த 'பி' பிரிவு ஆட்­டத்­தில் மலே­சி­யா­வி­டம் அது 7-0 எனும் கோல் கணக்­கில் நினைத்­துப் பார்க்க முடி­யாத வகை­யில் தோல்­வி­யைத் தழு­வி­யது.

ஏற்­கெ­னவே இவ்­விரு அணி­களும் அரை­யி­று­திக்­குச் செல்­லும் வாய்ப்­பைத் தவ­ற­விட்­டு­விட்­ட­ன.

எனவே, கடைசி ஆட்­டத்­தில் வெற்றி பெற்று கௌர­வத்­தைக் காப்­பாற்றி தலை­நி­மிர்ந்து நாடு திரும்ப இரு­த­ரப்­பி­ன­ரும் முனைப்­பு­டன் கள­மி­றங்­கி­னர்.

ஆனால் மலே­சி­யா­வுக்­குத்­தான் கூடு­தல் கோல் பசி இருந்­தது.

வலிமை, வேகம் ஆகி­ய­வற்­றில் மலே­சி­யா­வுக்குக் கொஞ்­சம்­கூட ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் சிங்­கப்­பூர் ஆட்­டக்­கா­ரர்­கள் தவித்­த­னர்.

மலே­சி­யா­வின் வெற்­றிக்கு அதன் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் சர­வ­ணன் திரு­மு­ரு­கன் வித்­திட்­டார் என்­றால் அது மிகை­யா­காது.

சிங்­கப்­பூர் குழு­வுக்கு எதி­ராக அவர் நேற்று நான்கு கோல்­க­ளைப் போட்­டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அவ­ரைத் தடுத்து நிறுத்த முடி­யா­மல் சி்ங்கப்பூரின் தற்­காப்பு அரண் தவி­டு­பொ­டி­யா­னது.

ஆட்­டத்­தின் 14வது நிமி­டத்­திலேயே மலே­சி­யா­வின் முதல் கோலை சரவணன் போட்­டார்.

ஹகிமி, முகாய்ரி, ஐமான் ஆகி­யோர் ஏனைய கோல்­க­ளைப் போட்­ட­னர்.

மலேசியப் பயிற்றுவிப்பாளர் இளவரசன் இளங்கோவனின் படை இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் பெற்றது.

சிங்கப்பூர் ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டு மற்ற ஆட்டங்களில் தோல்வி அடைந்து ஒரு புள்ளி மட்டுமே பெற்றது.