காவல்துறைமீது சிங்கப்பூரில் அதிக நம்பிக்கை: சண்முகம்

காவல்துறைமீது சிங்கப்பூரில் அதிக நம்பிக்கை: சண்முகம்

3 mins read

சிங்­கப்­பூர் காவல்­துறை மீ­தான நம்­பிக்கை தொடர்ந்து உச்­சத்­தில் உள்­ளது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

அதே­நே­ரம், காவல்­து­றைக்­கும் சமூ­கத்­துக்­கும் இடை­யி­லான உறவை எளி­தா­கக் கரு­தி­வி­டக்­கூ­டாது என்­றும் அந்த உறவு எதிர்­ம­றை­யாக மாற அனு­ம­திக்­கக்­கூ­டாது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் எக்ஸ்போ அரங்­கில் நேற்று நடை­பெற்ற காவல்­துறை பணித்திட்­டக் கருத்­த­ரங்கு மற்­றும் கண்­காட்­சி­யில் பங்­கேற்று திரு சண்­மு­கம் பேசி­னார்.

"உல­கின் பல பகு­தி­களில் காவல்­துறை என்­பது சமூ­கத்­தின் பாது­கா­வ­லன் என்­ப­தற்­குப் பதில் எதி­ரி­யா­கப் பார்க்­கும் சம்­ப­வங்­களை நாம் படிப்பினை ­க­ளாக எடுத்­துக்­கொள்ள வேண்­டும்," என்­றார் அவர்.

அதற்கு எடுத்­துக்­காட்­டாக அமெ­ரிக்க சம்­ப­வத்தை அவர் விளக்­கி­னார்.

"2020 ஜன­வ­ரி­யில் நடை­பெற்ற அதி­பர் தேர்­த­லில் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப் தோல்­வி­யைத் தழு­வி­ய­போது அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் ஆயு­தங்­க­ளு­டன் கிளர்ச்­சி­யில் ஈடு­பட்டனர். அங்கு அப்­போது நில­விய அர­சி­யல் சூழ­லில் காவல்­துறை சிக்­கிக்­கொண்­டது.

"சொத்­து­கள் சேத­ம­டைந்து, தாக்­கு­த­லில் 140க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் காய­முற்ற நிலை­யில் 1,000க்கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

"இந்­தச் சம்­ப­வத்தை அர­சி­ய­லி­லும் ஊட­கத்­தி­லும் இருந்த சிலர் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்த முயன்­ற­னர்.

"அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­க­ரால் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்ட படக்­காட்­சி­க­ளைப் பயன்­படுத்தி 'ஃபாக்ஸ் நியூஸ்' இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் செய்தி வெளி­யிட்­ட­போது, நடந்த சம்­ப­வங்­கள் குறித்து ஜன­நா­ய­க­வா­தி­கள் (அதி­பர் ஜோ பைடன் கட்சி) அமெ­ரிக்­கர்­க­ளி­டம் பொய் சொன்­னார்­கள் என்று செய்தி வாசித்­த­வர் குறிப்­பிட்­டார்.

"மன்ற நாய­கர் குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர். இது­போன்ற சம்­ப­வங்­கள் காவல்­துறையை அர­சி­யல் விவா­தங்­களுக்கு மத்­தி­யில் கொண்டு சென்று நிறுத்­தி­வி­டு­கின்­றன.

"பத­வி­யைப் பிடிப்­ப­தற்­காக அர­சி­யல் குழப்­பம் நிக­ழும் எல்லா ஜன­நா­யக நாடு­க­ளி­லும் இது­போன்று நிக­ழக்கூடும்.

"சில குழுக்­கள் அல்­லது மக்­களில் சிலர் காவல்­து­றையை பலி­கடா ஆக்­க­லாம். மேலும், அர­சி­யல் நிகழ்­வு­களுக்­கு அவர்களைத் துணை­போ­கச் செய்­ய­லாம்.

"நாம் இது­போன்­ற­வற்றை தவிர்க்க வேண்­டும். காவல்­துறை என்­பது நடு­நி­லை­யா­க­வும் சுதந்­தி­ர­மா­க­வும் செயல்­பட நாம் நமது ஆத­ரவை வழங்­க­வேண்­டும்.

"அர­சி­யல் நோக்­கத்­திற்­காக அந்­தத் துறை­யைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. அதே­போல அர­சி­யல் நட­வ­டிக்­கைக்­குக் காவல்­துறை பலி­யா­கி­வி­டா­ம­லும் பார்த்­துக்­கொள்ள வேண்­டும்," என்று அமைச்­சர் சண்­மு­கம் கேட்­டுக்­கொண்­டார்.

மேலும், அமெ­ரிக்­கா­வில் ஒவ்­வொரு நாளும் ஏற்­படும் நிலை­மை­யைச் சமா­ளிக்க காவல்­துறை படும் பாட்­டை­யும் அத­னால் சட்­டம் எந்த அள­வுக்­குப் பாதிக்­கப்­ப­டு­கிறது என்­ப­தை­யும் விளக்க அங்­குள்ள துப்­பாக்­கிப் பயன்­பாட்டை திரு சண்­முகம் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

மேலும் அவர் கூறு­கை­யில், "சிங்­கப்­பூர் உள்­ளிட்ட மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் அமெ­ரிக்க மக்­கள் கிட்­டத்­தட்ட வன்­மு­றைக்கு ஆளா­கி­றார்­கள் என்­பதை நம்ப கடி­ன­மாக உள்­ளது.

"இருப்­பி­னும் ஒவ்­வோர் ஆண்­டும் 50 முதல் 60 வரை­யி­லான காவல்­துறை அதி­கா­ரி­கள் அங்கு துப்­பாக்­கித் தோட்­டாக்­களுக்­குப் பலி­யா­கி­றார்­கள்.

"மேலும், சுடப்­பட்ட தமது சகா பற்றி அறி­யும் மற்ற அதி­கா­ரி­களின் மனப்­போக்கு பாதிக்­கப்­படு­கிறது.

"நமது 3.6 மில்­லி­யன் குடி­மக்­க­ளுக்கு நான்கு மில்­லி­யன் துப்­பாக்­கி­கள் இருக்­கு­மா­னால் நமது அதி­கா­ரி­கள் முற்­றி­லும் மாறு­பட்ட மனப்­போக்­கைக் கொண்­டி­ருப்­பார்­கள் என்று நான் கரு­து­கி­றேன்.

"அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் ஒவ்­வொரு சம்­ப­வத்­தை­யும் அச்­சத்­து­டன் அணு­க­வேண்டி வரும். சின்­னஞ்­சி­றிய சந்­தே­கம் ஏற்­பட்­டால்­கூட சுட­லாம் அல்­லது சுடப்­ப­ட­லாம் என்று மன­திற்­குள்­ளேயே கரு­தும் நிலை ஏற்­ப­ட­லாம்," என்­றார் திரு சண்­மு­கம்.