கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

2 mins read
641eda4c-e8f7-44b7-9e9b-3be705e45871
-

தான் ஆளும் ஒரே தென்னிந்திய மாநிலத்தையும் இழந்தது பாஜக

இந்­தி­யா­வின் கர்­நா­டக மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யுள்­ளது. அங்கு 224 தொகு­தி­க­ளுக்கு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தலில் பெரும்­பான்­மைக்கு தேவை­யான 113 தொகு­தி­க­ளை­யும் தாண்டி, 132 தொகு­தி­களில் வென்று மேலும் 4 தொகு­தி­களில் காங்­கி­ரஸ் முன்­னிலை வகித்­தது (சிங்கப்பூர் நேரம் நேற்றிரவு

10 மணி நிலவரப்படி). இதன்­மூ­லம் அக்­கட்சி மகத்­தான வெற்­றி­யைப் பதி­வு­செய்­தது.

மதச்­சார்­பற்ற ஜனதா தளம், சுயேச்­சைகளின் ஆத­ரவு தேவை­யின்றி தனித்து ஆட்சி அமைக்­கிறது காங்­கிரஸ்.

2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­னோட்­ட­மாக கர்­நா­டக சட்­ட­மன்றத் தேர்­தல் பார்க்­கப்­ப­டு­கிறது.

இத்­தேர்­த­லில் காங்­கி­ர­சின் வெற்றி குறித்து தலை­ந­கர் புது­டெல்­லி­யில் உள்ள காங்­கிரஸ் தலை­மை­ய­கத்­துக்கு வெளியே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசிய மூத்த தலை­வர் ராகுல் காந்தி, "காங்­கி­ர­சின் வெற்றி கர்­நா­டக மக்­க­ளின் வெற்றி," எனக் கூறி­னார்.

"ஏழை, எளி­யவர்­க­ளுக்கு ஆத­ர­வாக காங்­கி­ரஸ் நின்­றது. கர்­நா­ட­கா­வின் வெறுப்­புச் சந்தை மூடப்­பட்டு அன்பு நிலை­யம் திறக்­கப்­பட்­டுள்­ளது," என்று அவர் கருத்­து­ரைத்­தார்.

தேர்­த­லில் 63 தொகு­தி­களில் வென்று 2ல் முன்­னிலை வகித்த பார­திய ஜனதா கட்சி, தான் ஆளும் ஒரே தென்­னிந்­திய மாநி­லத்­தை­யும் இழந்­தது.

இத்­தேர்­த­லில் வெற்­றி­பெற்ற காங்­கி­ரஸ் கட்­சிக்கு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி வாழ்த்து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

காங்­கி­ரஸ் கட்சி இம்­முறை மீண்­டும் அரி­ய­ணை­யில் ஏற வேண்­டும் என்ற முனைப்­பில் ராகுல் காந்தி, பிரி­யங்கா காந்தி, டி.கே.சிவ­கு­மார், சித்­த­ரா­மையா, மல்­லி­கார்­ஜூன கார்கே உள்­ளிட்­டோர் மாநி­லம் முழு­வ­தும் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்­ட­னர்.

அதே­போல் கர்­நா­ட­கா­வில் ஆட்­சி­யில் இருக்­கும் பாஜ­க­வும் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்­டது. பிர­த­மர் மோடி, இந்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா உள்­ளிட்­டோ­ரும் தொகு­தி­வா­ரி­யாக பிர­சா­ரம் மேற்­கொண்­ட­னர். மதச்­சார்­பற்ற ஜனதா தள­மும் தங்­க­ளுக்­குப் பல­மாக இருக்­கும் தொகு­தி­களில் களம் கண்­டது.

கர்­நா­ட­கா­வில் ஆளும் கட்சி இரண்­டா­வது தவ­ணைக்­கா­லத்­தி­லும் ஆட்­சி­யைத் தொடர இய­லாத 38 ஆண்­டு­கால நிலை­யைத் தகர்த்­தெ­றிய பாஜக தீவி­ர­மாக முயற்சி செய்­த­போ­தும் அதற்­குப் பலன் கிடைக்­க­வில்லை.

இத்­தேர்­த­லில் தோல்­வியை ஏற்­றுக்­கொண்ட கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, தோல்வி குறித்து பாஜக முழு­மை­யாக ஆரா­யும் என்று சொன்­னார்.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே தலை­மை­யில் மூத்த தலை­வர்­கள் ஆலோ­சனை நடத்­து­கின்­ற­னர். ஆட்சி அமைக்க காங்­கி­ரஸ் உரிமை கோர­வுள்ள வேளை­யில், கர்நா­ட­கா­வின் அடுத்த முதல்­வர் யார் என்­பது பற்றி மக்­க­ளின் கவ­னம் திரும்­பி­யுள்­ளது.

முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மையா, காங்­கி­ரஸ் மாநி­லத் தலை­வர் டி.கே.சிவ­கு­மார் முதல்­வர் பத­விக்கு முன்­னணி வேட்­பா­ளர்­க­ளாக உள்­ள­னர்.