'எஸ்ஜி தூய்மை தினம்' நிகழ்வில் சாதனை அளவாக 4,383 தொண்டூழியர்கள் பங்கேற்பு

'எஸ்ஜி தூய்மை தினம்' நிகழ்வில் சாதனை அளவாக 4,383 தொண்டூழியர்கள் பங்கேற்பு

2 mins read
5c12dc66-bad3-4bc6-bf62-f9773a085b00
-

ஒரே இடத்­தில் குப்பை பொறுக்க சாதனை அள­வாக கிட்­டத்­தட்ட 4,400 பேர் நேற்று எஃப்1 பிட் கட்­ட­டத்­தில் திரண்­ட­னர்.

பொதுச் சுகா­தார மன்­றத்­தின் 'எஸ்ஜி தூய்மை தினம்' திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக நடை­பெற்ற நிகழ்­வில் அர­சாங்க அமைப்­பு­கள், லாப நோக்­க­மற்ற அமைப்­பு­கள், நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 4,383 தொண்­டூ­ழி­யர்­கள் குப்பை பொறுக்­கும் நட­வடிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

இதற்கு முந்­தைய சாதனை 2015ல் நிகழ்த்­தப்­பட்­டது. அப்­போ­தைய சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்­சைச் சேர்ந்த 1,798 ஊழி­யர்­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் ஹோங் லிம் பூங்­கா­வில் திரண்­ட­னர். பின்­னர் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சாக அந்த அமைச்சு பெயர் மாற்­றம் கண்­டது.

2021ல் தொடங்­கப்­பட்ட 'எஸ்ஜி தூய்மை தினம்' திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, அன்­றைய தினம் காலை 6 மணி முதல் நள்­ளி­ரவு வரை பொதுப் பூங்­காக்­கள், பூந்தோட்­டங்­கள், பூங்கா இணைப்­பு­கள், திறந்­த­வெளி இடங்­கள், வீட­மைப்­புப் பேட்­டை­க­ளின் தரைத் தளங்­களைப் பெருக்­கும் பணி இடம்­பெறவில்லை.

துப்­பு­ர­வா­ளர்­கள் இல்­லா­மல் அந்த இடங்­களில் குவி­யும் குப்­பை­யின் அளவு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம்.

நிகழ்­வில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய மத்­திய சிங்­கப்­பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா, "சிங்­கப்­பூ­ரைத் தூய்­மை­யாக வைத்­தி­ருக்க உத­வும் துப்பு­ர­வாளர்­க­ளுக்கு நன்றி கூற வேண்டும் என்ற செய்­தியை மக்­க­ளி­டம் கொண்­டு­சேர்க்க நாங்­கள் விரும்­பு­கிறோம்," என்­றார்.

உண­வங்­காடி நிலை­யங்­களில் உண­வ­ருந்­தி­விட்டு தட்டு­களை அப்­பு­றப்­ப­டுத்­தா­மல் விட்டுச்­செல்­வ­தற்கு எதி­ரான கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் குறித்து கேட்­ட­தற்கு, "அவ­சர நிலை ஏற்­ப­டும்­போதோ விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தி­யும் சில­ரின் நடத்­தை­யில் இன்­னும் மாற்­றம் காணப்­ப­டா­த­போதோ கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் பய­னுள்­ள­தாக அமை­கின்­றன," என்று திரு­வாட்டி புவா கூறி­னார்.

'சுத்­த­மாக வைத்­தி­ருங்­கள், சிங்­கப்­பூர்! இயக்­கத்­தின் இவ்வாண்டு நிகழ்­வும் நேற்று தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. குப்பை போடும் பிரச்­சினை, உயர்­தர சுகா­தா­ரத்­தைக் கட்­டிக்­காப்­பது குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது இதன் நோக்­கம்.

நிகழ்­வில் கலந்­து­கொண்ட கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், "சிங்­கப்­பூ­ரைத் தூய்­மை­யாக வைத்­தி­ருந்து, மேம்­பட்ட வாழ்க்கைத் தரத்­தைக் கொண்­டி­ருப்­பது மட்­டு­மல்ல.

"நல்ல குடி­மக்­க­ளாக இருந்து அடுத்த தலை­மு­றைக்கு மேம்­பட்ட சிங்­கப்­பூரை விட்­டுச்­செல்­வது நமது இலக்­காக இருக்க வேண்­டும்," என்­றார்.