'கிரேட் வோர்ல்டு மால்' அருகே புதிய வீடுகள்

'கிரேட் வோர்ல்டு மால்' அருகே புதிய வீடுகள்

2 mins read

வீவக வீடுகள் சிலவும் அமையக்கூடும்: துறைசார் கவனிப்பாளர்கள்

ஸியோன் ரோட்­டில் வீட­மைப்­புக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இரண்டு நிலப்­ப­கு­தி­களில் புதிய வீடு­கள் கட்­டப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

'செர்ஸ்' எனப்­படும் நிலப் பயன்­பாட்டை அதி­க­ரிக்­க­வும் மறு­மேம்­பாட்­டிற்­கும் உத­வும் திட்­டத்­தின்­கீழ் ஒதுக்­கப்­பட்ட பகு­தி­களில் அவ்­வி­ரண்டு பகு­தி­களும் அடங்­கும்.

இரு நிலப்­ப­கு­தி­க­ளி­லும் பொது வீட­மைப்­பின்­கீழ் வீடு­கள் கட்­டப்­ப­டக்­கூ­டும் என்று துறை­சார் கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

சென்ற வெள்­ளிக்­கி­ழமை நில மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் அதன் பெருந்­திட்­டத்­தில் திருத்­தத்­தைப் பரிந்­து­ரைத்­தது.

ஹேவ்­லாக் பகு­தி­யில் ஏறக்­கு­றைய 2.3 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் (மூன்று காற்­பந்­துத் திடல்­க­ளுக்கு மேற்­பட்ட பரப்­பளவு) அரு­க­ருகே அமைந்­துள்ள இரண்டு நிலப்­ப­கு­தி­கள் பற்றி அந்­தத் திருத்­தம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த நிலப்­ப­கு­தி­க­ளுக்­கும் 'கிரேட் வோர்ல்டு மால்' கடைத்­தொ­கு­திக்­கும் இடையே அலெக்­ஸாண்­டிரா கால்­வாய் அமைந்­துள்­ளது.

அந்த நிலப்­ப­கு­தி­களில் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­க­ளு­டன் வர்த்­த­கக் கட்­ட­டங்­கள், அலெக்­ஸாண்­டிரா கால்­வாய்க்கு அருகே பூங்கா போன்­ற­வற்றை அமைக்­கத் திட்­ட­மி­டு­வ­தாக ஆணை­யம் கூறி­யது.

இரண்டு நிலப்­ப­கு­தி­களில் தெற்­கில் அமைந்­துள்­ளது ஏறக்­கு­றைய 1.45 ஹெக்­டர் பரப்­ப­ளவு கொண்­டது. தற்­போது ஹோட்­டல் கட்ட ஒதுக்­கப்­பட்­டுள்ள அந்த நிலப்­ப­கு­தி­யில் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள் அமைக்­க­லாம் என்று ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதில் 800 முதல் 850 அடுக்கு­மாடி வீடு­க­ளைக் கட்ட இய­லும் என்று சொத்து இணை­ய­வா­ச­லான 'மொகல்.எஸ்ஜி'யின் தலைமை ஆய்வு அதி­காரி நிக்­கொ­லஸ் மாக் குறிப்­பிட்­டார்.

வடக்­கில் உள்ள நிலப்­ப­குதி ஏற்­கெ­னவே குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 0.9 ஹெக்­டர் பரப்­ப­ளவு கொண்ட அதில், 500 முதல் 550 வீடு­க­ளைக் கட்­ட­லாம் என்றார் அவர்.

தனி­யார் கூட்­டு­ரிமை வீடு­களுக்­கான ஏலக்­குத்­த­கை­யின் மூலம் அவ்­விரு நிலப்­ப­கு­தி­களும் விற்­ப­னைக்கு விடப்­பட்­டால் அர­சாங்­கத்­துக்கு அதிக லாபம் கிட்­டும்.

ஆனால் அங்கு தனி­யார் வீடு­கள் மட்­டு­மன்றி பொது வீட­மைப்­பின்­கீழ் அமை­யும் வீடு­களும் கட்­டப்­ப­டக்­கூ­டும் என்­றார் 'புரோ­பர்ட்டி குரு சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர்க் கிளை மேலா­ளர் டான் டீ கூன்.

சமூ­கத்­தில் பிள­வு­க­ளைக் குறைக்­கும் நோக்­கில் முக்­கிய இடங்­களில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் நிலைப்­பாட்­டிற்கு அர­சாங்­கம் முன்­னு­ரிமை தரு­வதை அவர் சுட்­டி­னார்.

மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் இருந்து இரண்டு கிலோ­மீட்­டர் தொலை­விற்­குள் அவ்­விரு நிலப்­ப­கு­தி­களும் அமைந்து உள்­ளன.

அங்கு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீடு­கள் கட்­டப்­பட்­டால் அவை முதன்மை வட்­டா­ரப் பொது வீட­மைப்பு மாதிரி (பிஎல்­எச்) வீடு­க­ளா­கவே அமை­யும் என்று கவ­னிப்­பா­ளர்­கள் பல­ரும் கருத்­து­ரைத்­துள்­ளனர்.

அந்த நிலப்­ப­கு­தி­க­ளுக்கு அருகே கட்­டப்­படும் இதர கட்டு­மா­னங்­கள் அத்­திட்­டத்­தின்­கீழ் அமைந்­தி­ருப்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

ஏற்­கெ­னவே அங்கு அமைந்­தி­ருந்த வீவக வீடு­கள், 2013ஆம் ஆண்டு 'செர்ஸ்' திட்­டத்­தின்­கீழ் அடை­யா­ளம் காணப்­பட்டு இடிக்­கப்­பட்­டன. அங்­கி­ருந்த 636 வீடு­க­ளைச் சேர்ந்­தோ­ருக்கு 500 மீட்­டர் தொலை­வில் 'ஹேவ்­லாக் வியூ' அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் வீடு­கள் வழங்­கப்­பட்­டன.

அந்த வட்டாரத்தில் கடந்த 16 மாதங்களில் சராசரியாக, சதுர அடிக்கு $2,842 என்ற மதிப்பில் கூட்டுரிமை வீடுகளின் விலை அமைந்திருப்பதாகக் கூறிய கவனிப்பாளர்கள், 'ஜிஎல்எஸ்' எனப்படும் அரசாங்க நில விற்பனை அறிவிக்கப்பட்டால் விலை மேலும் ஏறக்கூடும் என்று குறிப்பிட்டனர்.