தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ்: கர்நாடகத் தேர்தலில் மகத்தான வெற்றி; ஆனால் மகுடம் சூட்டுவதில் குழப்பம்

2 mins read
c9a4f72e-49d1-4ce6-999f-1c338aec3ad0
-

இந்­தி­யா­வின் கர்­நா­டக மாநி­லத்­தில் நேற்று முன்­தி­னம் சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் வெளி­யான நிலை­யில் காங்­கி­ரஸ் கட்சி மகத்­தான வெற்­றி­பெற்­றது. ஆளும் பார­திய ஜனதா கட்சி (பாஜக) தோல்­வி­யைத் தழு­வி­யது.

224 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட கர்­நா­டக சட்­ட­மன்­றத்­துக்­கான தேர்­தல் இம்­மா­தம் 10ஆம் தேதி நடை­பெற்­றது. அதில் 223 தொகு­தி­களில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ் கட்சி 135 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது.

அக்­கட்சி கர்­நா­ட­கா­வில் 34 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அதிக தொகு­தி­களில் வெற்றி பெற்­றி­ருப்­பது இதுவே முதல்­முறை.

அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யிட்ட பாஜக 65 இடங்­களில் மட்­டுமே வெற்­றி ­பெற்­றுள்­ளது.

ஜெய­ந­கர் தொகு­தி­யில் முத­லில் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் சௌமியா ரெட்டி 294 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் மறு­வாக்கு எண்­ணிக்­கை­யில் பாஜக வேட்­பா­ளர் சி.கே.ராம­மூர்த்தி 16 வாக்கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­ற­தா­கப் பின்­னர் அறி­விக்­கப்­பட்­டது.

உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில்­தான் இறுதி முடிவு அறி­விக்­கப்­பட்­டது. ஆட்சி அமைக்க 113 இடங்­களே தேவை என்ற நிலை­யில் 135 தொகு­தி­களில் வெற்­றி­பெற்ற காங்­கி­ரஸ் கட்சி பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைக்க இருக்­கிறது. அக்­கட்­சிக்கு 42.88 விழுக்­காட்டு வாக்­கு­கள் பதி­வா­யின.

விறு­வி­றுப்­பான தேர்­தல் களத்­தில் கட்சி வாகை சூடி­னா­லும் முதல்­வர் பொறுப்பை ஏற்க இருப்­ப­வர் யார் என்­பது குறித்த குழப்­பம் நில­வு­கிறது.

முன்­னாள் முதல்­வ­ரும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரு­மான சித்­த­ரா­மை­யா­வுக்­கும் தற்­போ­தைய மாநில காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவக்­கு­மா­ருக்­கும் இடையே கடும் போட்டி நில­வு­கிறது. இதற்­குத் தீர்­வு­கா­ணும் வகை­யில், காங்­கி­ரஸ் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டம் நேற்று மாலை பெங்­க­ளூ­ரில் நடை­பெற்­றது. அக்­கூட்­டத்­தில் முதல்­வ­ரைத் தேர்ந்து எடுக்­கும் நோக்­கில் ரக­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

ஆனால் மாநில முதல்­வரை ஒரு­ம­ன­தா­கத் தேர்வு செய்­யவே காங்­கி­ரஸ் மேலி­டம் விரும்­பு­வ­தாகத் தெரி­கிறது. எனவே, முதல்­வர் ஒரு­ம­ன­தா­கத் தேர்வு செய்­யப்­ப­ட­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கருத்து கட்சி மேலி­டத்­துக்­குத் தெரி­விக்­கப்­படும். அதன்­பி­றகு முதல்­வரை கட்சி மேலி­டம் தேர்ந்­தெ­டுக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சித்­த­ரா­மை­யா­வுக்­கும் தமக்­கும் இடை­யில் கருத்து வேற்­றுமை எது­வும் இல்லை என்று திரு சிவக்­கு­மார் நேற்று கூறி­னார்.

இதற்­கி­டையே, சட்­ட­மன்­றத் தேர்­தல் தோல்­வி­யைத் தொடர்ந்து பாஜக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை நேற்று முன்­தி­னம் இரவு பதவி வில­கி­னார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "தோல்­வியை ஒப்­புக்­கொள்­கி­றோம். ஆனால் இது பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் தோல்வி அன்று. அவர் தேசி­யத் தலை­வர். காங்­கி­ரஸ் தலை­மைத்­து­வம் நாடு முழு­வ­தும் தோல்­வி­யைத் தழு­வி­ய­துண்டு," என்று கூறி­னார். கர்­நா­ட­கா­வின் புதிய முதல்­வர் இம்­மா­தம் 17 அல்­லது 18 ஆம் தேதி பத­வி­யேற்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஊட­கங்­கள் கூறு­கின்­றன.