மேற்கு மியன்மாரை 'மோக்கா' சூறாவளி தாக்கியதில் குறைந்தது மூவர் உயிரிழந்துவிட்டதாகவும் 13 பேருக்குக் காயம் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
சூறாவளியில் பெருத்த சேதத்துக்குள்ளானது கலவரத்தில் சிக்கியுள்ள ரக்கைன் மாநிலம் என்று அறியப்படுகிறது.
வீட்டுக் கூரைகளைச் சூறையாடும் அளவுக்கு மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 850க்கும் மேற்பட்ட வீடுகளும் 64 பள்ளிகளும் 14 மருத்துவக் கட்டடங்களும் ஏழு தொலைத்தொடர்பு கட்டடங்களும் சூறாவளியால் சேதமடைந்தும் அழிந்தும் போனதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
இதற்குமுன் நர்கிஸ் சூறாவளியால் தென்மியன்மாரில் ஏறத்தாழ 140,000 பேர் உயிரிழந்தனர்.

