கோலாலம்பூர் கடைத்தொகுதியில் தீ விபத்து

மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள ‘மிட் வேலி மெகா­மால்’ கடைத்­தொ­கு­தி­யில் நேற்றுக் காலை ஏற்­பட்ட தீ கட்டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்டு அணைக்­கப்­பட்­டது. அந்­தக் கடைத்­தொ­குதி நேற்று மூடப்­பட்டு இருந்­தது.

பிற்­ப­கல் 12.29 மணிக்­குள், அதா­வது தீ மூண்டு ஏறக்­கு­றைய இரண்டு மணி­நே­ரம் கழித்து அது முழு­மை­யாக அணைக்­கப்­பட்டுவிட்­ட­தாக கடைத்­தொ­குதி நிர்­வா­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

வெளிப்­புற துணை நிலை­யத்­தில் தீ மூண்­டது குறித்து காலை 10.30 மணிக்கு கடைத்­தொ­கு­தி­யின் தீக்கட்­டுப்­பாட்டு நிலை­யத்­துக்குத் தக­வல் கிடைத்­தது.

காலை 10.32 மணிக்கு தக­வல் வந்­த­தைத் தொடர்ந்து தீய­ணைப்பு வீரர்­கள் சம்­பவ இடத்­துக்கு விரைந்­த­தாக கோலா­லம்பூர் தீய­ணைப்பு, மீட்­புத் துறை தெரி­வித்­தது.

“தீ விபத்­தில் எவ­ரும் காயம் அடைந்­த­தா­கவோ உயி­ரு­டற்­சேதம் ஏற்­பட்­ட­தா­கவோ தக­வல் இல்லை,” என்று குறிப்­பிட்ட கடைத்­தொ­குதி நிர்­வா­கம், சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடை­பெ­று­வ­தா­கச் சொன்­னது.

மின்­மாற்­றி­யைக் குளி­ரூட்­டும் எண்­ணெய் அதி­கப்­ப­டி­யாக சூடாகி தீப்­பி­டித்­துக்­கொண்­டதே துணை நிலை­யத்­தில் தீ வி­பத்து ஏற்­பட கார­ண­மாக இருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­வ­தாக நகர தீயணைப்பு, மீட்­புத் துறை உதவி இயக்­கு­நர் எம். ஃபட்டா எம். அமின் தெரி­வித்­தார்.

மின்­மாற்­றி­யைக் குளி­ரூட்ட 12,400 லிட்­டர் எண்­ணெய் பயன்­படுத்­தப்­பட்­ட­தாக முதற்கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­த­தாக அவர் கூறி­னார்.

“குளி­ரூட்­டும் எண்­ணெய்க்கு 137 டிகிரி செல்­சி­யஸ் தீப்­பற்­று­நிலை இருப்­ப­தால், அத­னால் தீ மூண்­டி­ருக்­க­லாம் என நாங்­கள் நம்­பு­கி­றோம்,” என்று செய்­தி­யாளர்­க­ளி­டம் அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், தீ விபத்து கார­ண­மாக கடைத்­தொ­கு­தி­யிலும் அதைச் சுற்­றி­யுள்ள பகுதி­க­ளி­லும் தடை­பட்ட மின்­விநி­யோ­கம் பிற்­ப­கல் 12.30 மணி­ய­ள­வில் வழக்­க­நி­லைக்­குத் திரும்பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக ‘மிட் வேலி மெகா­மால்’, ‘தி கார்­டன்ஸ் மால்’ கடைத்­தொகு­தி­களில் இருந்து அனை­வரும் வெளி­யேற்­றப்­பட்­ட­தா­கச் சொன்ன நிர்­வா­கம், ‘மிட் வேலி மெகா­மால்’ அமைந்­துள்ள ‘மிட் வேலி சிட்டி’யில் அலு­வ­ல­கங்­கள், ஹோட்­டல்­கள், கடை­கள் அனைத்­தும் இன்று மீண்­டும் திறக்­கப்­படும் என்று கூறி­யது.

‘மிட் வேலி மெகா­மால்’ கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் இருக்­கும் ‘நூ சென்ட்­ரல் மால்’ கடைத்­தொகு­தி­யும் மூடப்­பட்­டது. திடீர் மின்­த­டையை அது சுட்­டி­யது.

ஆனால், மின்­வி­நி­யோ­கம் தொடர்­பில் வேறொரு பிரச்­சினை கார­ண­மா­கவே அங்கு மின்­தடை ஏற்­பட்­டது என மின்­வி­நி­யோக நிறு­வ­ன­மான டிஎன்பி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!