அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு விலையுயர்ந்த மருந்துடன் விரைவில் சிகிச்சை

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு விலையுயர்ந்த மருந்துடன் விரைவில் சிகிச்சை

2 mins read

அரிய வகை நோயால் பாதிக்­கப்­பட்டு உயி­ருக்­குப் போரா­டும் 21 மாதக் குழந்­தை­யைக் காப்­பாற்று வதற்­கான காலம் குறைந்து வரும் நிலை­யில் மருத்­து­வச் செல­வுக்கு இரண்டு மில்­லி­யன் வெள்ளி திரட்­டப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட விலை­யு­யர்ந்த மருந்து ஒன்று அந்­தக் குழந்­தைக்­குத் தேவைப்­ப­டு­கிறது. 'ஸோல்­ஜென்ஸ்மா' (Zolgensma) என்ற நோவார்­டிஸ் நிறு­வ­னத்­தின் மருந்து மர­பணு சிகிச்­சைக்­காக ஒருமுறை வழங்­கப்­ப­டக்­கூ­டி­யது. அதன் விலை மூன்று மில்­லி­யன் வெள்ளி. ஆனால் $2,397,300க்கு குறைக்­கப்­பட்­டுள்­ளது. அவர் களின் காப்புறுதி நிறு­வ­னம் எஞ்­சி­யச் செலவுகளை ஈடு­கட்ட முன்­வந்­துள்­ளது.

திரு அச்­சிந்தா பில­பித்­திய, அவ­ரது மனைவி திரு­மதி துலாஞ்­சலி வாக்­வெலா (இரு­வ­ருக்­கும் வயது 33), தம்­ப­தி­யி­டம் தற்­போது மக­னுக்­குச் சிகிச்சை யளிக்க போது­மான பணம் உள்­ளது.

அவர்­க­ளு­டைய மகன் ஷமெல் அரிய முது­கெ­லும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

'ரே ஆஃப் ஹோப்' நன்­கொடைத் தளத்­தின் மூலம் அவர்­கள் $2.02 மில்­லி­யனைத் திரட்­டி­னர். வெளி­நாட்­டில் உள்ள நன்­கொ­டை­யா­ளர்­கள் மூலம் மேலும் 294,000 வெள்ளி திரட்­டப்பட்­டது. எஞ்­சிய செல­வு­கள் காப்­பு­றுதி மூலம் செலுத்­தப்­ப­ட­வி­ருக்கிறது.

"எங்­க­ளு­டைய சக்­தி­யெல்­லாம் தீர்ந்து ஓய்ந்­த­பி­றகு மருத்­துவமனை­யில் இருந்து நற்­செய்தி வந்­தது," என்­றார் மென்­பொ­ருள் நிபு­ணர் திரு அச்­சிந்தா.

ஏப்­ரல் 21ஆம் தேதி 'ஸோல்­ஜென்ஸ்மா' மருந்து பதிவு செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அறிவியல் ஆணை­யம் மூலம் அறி­யப்படு­கிறது.

இந்த மர­பணு சிகிச்சை உல­கி­லேயே ஆகச்செல­வு­மிக்­கது. குழந்தை இரண்டு வயதை அடை­வ­தற்­குள் கொடுத்­தாக வேண்­டும். ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்­றுப் பேசிய ஷமெ­லின் பெற்­றோர், சிங்­கப்­பூர் தேசிய பல்­ கலைக்­க­ழக மருத்­து­வ­மனை மூலம் மருந்தை வாங்க முடி­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.