ஆப்பிரிக்காவில் பல வர்த்தக வாய்ப்புகள்

ஆப்பிரிக்காவில் பல வர்த்தக வாய்ப்புகள்

2 mins read
e0d67697-5706-4439-8dc8-86655221e0ac
-

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பிரதமர் ஆலோசனை

புதிய சந்­தை­களில் நுழைய விரும்­பும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் ஆப்­பி­ரிக்­காவை தவ­ற­வி­டக் கூடாது. அங்­கும் ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்­ளன என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது வெளி­நாட்­டுப் பய­ணத்­தின் இறு­தி­யில் பேசி­யி­ருக்­கி­றார்.

"ஆப்­பி­ரிக்கா பெரிய கண்­ட­மா­கும். சிக்­க­லா­னது. ஆபத்து இல்­லா­மல் இருக்­காது. ஆனால் சிங்­கப்­பூ­ரு­டன் நல்­லுறவை வளர்க்க விரும்­பும், துடிப்­பு­மிக்க, நல்­லெண்­ணம் கொண்ட நாடு­கள் அங்கு உள்­ளன," என்று தென்­னாப்­பி­ரிக்கா, கென்­யா­வுக்­கான ஆறு நாள் பய­ணத்தை முடித்­துக் கொண்டு பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

"உல­கம் முழு­வ­தும் சி­ரம­மான சூழல் நில­வினாலும் புதிய சந்­தை­க­ளைக் கண்­ட­றி­வ­தில் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் முனைப்­பு­டன் செயல்பட வேண்­டும். தற்­போது ஈடு­பட்­டுள்ள தொழில்­களை வலுப்­படுத்­து ­வ­தோடு இதற்கு அப்­பா­லுள்ள வர்த்­தக வாய்ப்­பு­க­ளையும் கண்­ட­றிய வேண்­டும்," என்று அவர் கேட்­டுக் கொண்­டார்.

"தொழில்­ம­ய­மா­தல் தொடங்­கி­ய­தி­லி­ருந்தே ஆசியா, சீனா, இந்­தியா போன்­றவை நமது வழக்­க­மான சந்­தை­க­ளாக இருந்து வரு­கின்­றன. இதை­யும் தாண்டி புதிய சந்­தை­களுக்குள் நுழைய வேண்­டும். அந்த வகை­யில் ஆப்­பி­ரிக்கா மீது நாம் கவ­னம் செலுத்த வேண்­டிய கண்­டங்­களில் ஒன்­றாக உள்­ளது," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

கடந்த ஏப்­ரல் மாதம் நாடாளு­ மன்­றத்­தில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் உரை நிகழ்த்­திய பிறகு உறுப்­பி­னர்­கள் விவா­தித்­த­னர்.

அப்­போது பேசிய திரு லீ, மற்­ற­வர்­க­ளு­டன் வணி­கம் புரி­வ­தும் மதிப்பை அதி­க­ரிப்­ப­துமே சிங்­கப்­பூ­ரின் உயிர்­நாடி என்று கூறி­யி­ருந்­தார்.

"ஆபத்­து­களை எதிர்­கொண்டு புத்­தாக்­கத்­து­ட­னும் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­ட­னும் செயல்­பட விரும்­பும் வேளை­யில் மற்ற நாடு­க­ளு­ட­னான தொடர்பை இரட்­டிப்­பாக்க வேண்­டும்.

"நிறைய பிரச்­சி­னை­கள் உள்ள நாடு­கள் (ஆப்­பி­ரிக்­கா­வில்) இருக்­கின்­றன. மற்ற சில நாடு­களில் உறு­திப்­பாடு உள்­ளது. மற்­றும் சில நாடு­களில் சிக்­கல்­கள் உள்­ளன. ஆனால் யாரு­டன் சேர்ந்து தொழி­லைத் தொடங்­க­லாம், எந்­தத் துறை­யில் நுழை­ய­லாம் என்­பதை அறிந்­தி­ருந்­தால் வாய்ப்­பு­களை விடாமல் கைப்­பற்ற வேண்­டும். தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லும் கென்­யா­வி­லும் உள்ள இது­போன்ற வாய்ப்­பு­களையும் தவ­ற­வி­டக் கூடாது," என்று பிர­த­மர் லீ மேலும் தெரி­வித்­தார்.

சென்ற செவ்­வாய்க்கிழமை தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்­த­போது, ஆப்பரிக்க நாடு­களில் உள்ள வாய்ப்புகளை சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்தி வளர்ச்­சி­ய­டைந்து முன்­னே­றி­யுள்­ளதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­தப் பய­ணத்­தோடு பிர­த­மர் லீ, ஓராண்­டுக்­குள் மூன்று ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு சென்றுள்­ளார். 2022 ஜூனில் காமன்­வெல்த் நாடு­க­ளின் தலை­வர்கள் கூட்­டத்­தில் பங்­கேற்பதற்காக அவர் ருவாண்டா சென்­றார்.