'ரூ.2000 செல்லுபடியாகும்'

'ரூ.2000 செல்லுபடியாகும்'

2 mins read
ff0483d1-216d-4e7a-beb2-ccbd10239a5a
-

அதிக மதிப்­பு­மிக்க ரூ. 2000 நோட்டு மீட்­டுக் கொள்­ளப்­படும் என்ற இந்­திய அர­சாங்­கத்­தின் அறி­விப்பு நாடு முழு­வ­தும் புய­லைக் கிளப்­பி­யி­ருக்­கும் வேளை­யில் அந்த நோட்டு தொடர்ந்து செல்­லு­ப­டி­யா­கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் செப்­டம்­பர் 30ஆம் தேதிக்­குள் ரூ.2000 (S$32.44) நோட்டை வங்­கி­யில் மாற்­றிக்கொள்­ள­லாம் அல்­லது முத­லீடு செய்­ய­லாம் என்று இந்­தி­யா­வின் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்­தியா அறிவித்துள்ளது.

அதே சமயம் 2000 ரூபாய் நோட்டு தொடர்ந்து செல்­லு­ப­டி­யா­கும் என்று அது தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

ரூ.2000 நோட்டு மீட்­டுக் கொள்­ளப் படு­வதால் மக்­க­ளின் இயல்­பு வாழ்க்­கை, அல்­லது பொரு­ளி­யலைப் பாதிக்காது என்று நிதி அமைச்­சின் உயர் அதி­கா­ரி­யான டி.வி. சோம­நா­தன் கூறினார்.

இவ்­வாண்டு இறு­தி­யில் நான்கு பெரிய மாநி­லங்­க­ளி­லும் அடுத்த ஆண்­டில் நாடாளு மன்­றத் தேர்­த­லும் நடை­பெறவிருக்­கும் வேளை­யில் ரூ.2000ஐ மீட்­டுக்கொள்­ளும் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

பழைய ரூபாய் நோட்­டு­களை திரும்­பப் பெறு­வது ரிசர்வ் பேங்கின் வழக்­க­மான நடை­முறை என்று அதன் முன்­னாள் துணை ஆளு­நர் ராம சுப்­ர­ம­ணி­யம் காந்தி தெரி­வித்­தார்.

2016ஆம் ஆண்­டில் அதிக அள­வில் புழக்­கத்­தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டு­ செல்­லாது என்று அதி­ர­டி­யாக அறி ­விக்­கப்­பட்ட பிறகு அர­சாங்­கம் ரூ.2000 நோட்­டுக்­களை வெளி­யிட்­டது. தற்­போது இதன் நோக்­கம் நிறை­வே­றி­விட்­டது.

இந்­தி­யா­வில் சாதா­ரண மக்­க­ளி­டம் ரூ.2000 நோட்­டுப் புழக்­கம் வெகு­வா­கக் குறைந்துவிட்­டது. மேலும் மின்­னி­லக்­கப் பரி­வர்த்­தனை மூலைமுடுக்கெல்லாம் பர­வி­விட்­ட­தால் ரூபாய் நோட்­டுகளை மக்­கள் பயன்­ப­டுத்­துவதில்லை. சிலர், 2000 ரூபாய் நோட்டைப் பார்த்து பல மாதங்­கள் ஆகி விட்­ட­தா­கக் கூறு­கின்­ற­னர். 2018-19இல் இரண்­டா­யி­ரம் ரூபாய் அச்­ச­டிப்­பதை ரிசர்வ் வங்கி நிறுத்­திவிட்டது.

இதற்­கி­டையே ரூ.2000ஐ மீட்­டுக் கொள்வதை ஆந்­திர மாநில முன்­னாள் முதல்­வ­ரும் தெலுங்கு தேசம் கட்­சி­யின் தலை­வ­ரு­மான சந்­தி­ர­பாபு நாயுடு வர­வேற்று உள்­ளார்.

"ஊழல், பதுக்­கல், வாக்­கா­ளர்­க­ளுக்கு லஞ்­சம் கொடுப்­ப­தற்கு மூல கார­ண­மான இருக்­கும் அதிக மதிப்­புள்ள ரூபாய் நோட்டு களை ரத்து செய்ய வேண்­டும் என்று நான் நீண்டகால­மா­கவே வலி­யு­றுத்தி வரு­கி­றேன். இந்த நட­வ­டிக்கை வாக்­கா­ளர்களுக்கு பணம் விநி­யோ­கிப்­பதை பெரிய அள­வில் தடுக்க உத­வும்," என்று அவர் கூறி­ உள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்சி, இது பார­திய ஜனதா கட்­சி­யின் வழக்­க­மான பாணி என்று குறிப்­பிட்­டுள்­ளது.

தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், "500 சந்­தே­கங்­கள், 1000 மர்­மங்­கள், 2000 பிழை­கள்!, கர்­நா­ட­கப் படு­தோல்­வியை மறைக்க ஒற்­றைத் தந்­தி­ரம்!," என்று டுவிட்­டர் பதி­வில் விமர்­சித்­துள்­ளார்.