சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம்

2 mins read

அனுஷா செல்­வ­மணி

இந்­தி­யா­வின் ரூ.2000 நோட்டு பற்­றிய அறி­விப்பினால் அந்­நாட்­டில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அலை சிங்­கப்­பூ­ரி­லும் பரவி உள்ளது.

இத­னால் நாணய மாற்று வணி­கர்­களும், இந்­தி­யா­விற்­குப் பணம் அனுப்பு பவர்­களும் பாதிப்­ப­டை­யக்கூடும் என்ற நிலையில், லிட்­டில் இந்­தி­யா­வில் நாணய மாற்று வணி­கர்­கள் சிலர் தங்­கள் கருத்து­க­ளைப் பகிர்ந்துகொண்­ட­னர்.

மோனிஷா எக்ஸ்­சேஞ் உரி­மை­யா­ள­ரான 56 வயது வேத­ரத்­தி­னம் சம்­மந்­தம், "இந்­தச் செய்தி எங்­க­ளுக்கு ஒரு இக்­கட்­டான சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­கள் இப்­பொ­ழுதே பணத்தை மாற்ற விரை­கி­றார்­கள். இடை­யில் மூன்று மாத கால அவ­கா­சம் இருப் பதால் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இந்­தி­யா­விற்­குச் சென்று அங்­குப் பணத்தை மாற்ற பரிந்­து­ரைத்­துள்­ளேன்." என்­றார்.

கொவிட்-19 தொற்று தொடங்­கி­ய­தில் இருந்தே ரூ.2000 நோட்­டு­களை இந்­தி­யா­வுக்கு அனுப்­பும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கைக் கணி­ச­மாக குறைந்து விட்­ட­தா­கப் பகிர்ந்த 'பீபல்ஸ் பார்க் மணி சேஞ்­சர்' ஊழி­ய­ரான ஷேக் அலா­வு­தீன், 62, இந்­தப் புதிய மாற்­றத்­தால் எவ்­வித பாதிப்­பும் ஏற்படாது என்று நம்புகிறார்.

அப்­பர் டிக்­சன் சாலை­யில் அமைந்­துள்ள நாணய மாற்றுக் கடை ஒன்­றின் மேலா­ள­ரான அப்­துல்லா, 34, புதிய அறி­விப்­பால் ஒரு குழப்­பத்­தில் உள்­ளார்.

"இன்று காலையே பல வாடிக்­கை­ யாளர்­கள் வந்­து­விட்­ட­னர். அச்­ச­மா­க­வும் குழப்­ப­மா­க­வும் இருக்­கிறது. ரூ.2000 நோட்­டு­கள் அதி­க­மாக உள்­ளன.

"இவை அனைத்­தும் இந்­தி­யா­வில் இருக்­கும் எங்­கள் உற­வி­னர்­க­ளி­டம் தந்து மாற்றச் சொல்ல வேண்­டும். வேறு எந்த சிறந்த வழி­யும் எனக்கு இப்­பொ­ழுது தோன்­ற­வில்லை." என வருந்­தி­னார்.

இந்நிலையில் இந்தியாவில்தான் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியும் என்றும் தனது வாடிக்கையாளர்களிடம் நாணய மாற்று வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்­தி­யா­வில் தங்­கள் குடும்ப உறுப் பினர்­க­ளுக்கு மாதா மாதம் பணம் அனுப்­பும் வெளி­நாட்டு ஊழி­யர்­களும் இந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீள முடி­யவில்லை.

கட்­டு­மா­னத் துறை­யில் பணி­பு­ரி­யும் 28 வயது மகா­லிங்­கம் கலைச்­செல்­வன், "சங்­க­ட­மாக இருக்­கிறது. ஒவ்­வோர் மாத­மும் நிம்­ம­தி­யாக பணம் அனுப்­பிக்­கொண்­டி­ருந்­தேன். இப்­பொ­ழுது புதிய செய்தி கேட்­ட­வு­டன் செய்­வ­த­றி­யா­மல் இருக்­கி­றேன். இந்­தி­யா­விற்­குச் சென்று முன்­கூட்­டியே நோட்­டு­களை மாற்­றி­விட வேண்­டும்." என்­றார்.

கட்­டு­மா­னத் துறை­யில் பணி­பு­ரி­யும் முத்­து­சாமி முர­ளி­தாஸ், 35, "இத­னால் என்­னைப் போன்ற நடுத்­த­ர­வா­சி­கள் மிக­வும் சிர­மப்­ப­டு­வார்­கள். வங்­கி­க­ளுக்­குச் சென்று பணம் மாற்ற வேண்­டும். இது நான் எதிர்­பார்க்­காத ஒன்று. இதைப் பற்றி நினைத்­தாலே வருத்­த­மாக உள்­ளது." என்று கூறி­யுள்­ளார்.