எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சிங்கப்பூரர் காணவில்லை

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சிங்கப்பூரர் காணவில்லை

2 mins read
2349fcad-caef-4ece-b01a-7dd26275c89f
-

எவ­ரெஸ்ட் சிக­ரத்­தில் ஏறிய சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் காணா­மல் போனார். வெள்­ளிக்­கி­ழமை எவ­ரெஸ்ட் சிக­ரத்­தின் தெற்கு உச்­சி­யில் சுமார் 8,500 மீட்­டர் உய­ரத்­தில் இருந்­த­போது ஸ்ரீநி­வாஸ் சைனிஸ் தத்­தா­தி­ராயா, 39, காணா­மல் போனதாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

அங்­கி­ருந்­து­தான் அவர் கடை­சி­யாக அடித்­தள முகா­மு­டன் தொடர்பு கொண்­டுள்­ளார்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு எவ­ரெஸ்ட் சிக­ரத்தை எட்டிவிட்­ட­தாக அவர் தனது மனை­விக்கு குறுந்­த­க­வல் அனுப்பியிருக்­கி­றார். அதன் பிறகு அவ­ரைப் பற்றிய தக­வல் இல்லை.

ஜோன்ஸ் லாங் லசால் எனும் சொத்து நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான ஸ்ரீநி­வாஸ் ஏப்­ரல் 1ஆம் தேதி எவ­ரெஸ்ட் மலை­யேற புறப்­பட்­டுச் சென்­றார். ஜூன் 4ஆம் தேதி அவர் வீடு திரும்­பு­ வ­தாக இ­ருந்­தது.

கண­வர் காணா­மல்­போ­னது குறித்து ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்­சி­டம் நேற்று பேசிய அவ­ரது மனைவி சுஷ்மா சோமா, 36, வெள்­ளிக் ­கி­ழமை பிற்­ப­கல் 3.30 மணி­ய­ள­வில் அவ­ரது குரலை கடை­சி­யாகக் கேட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

"செயற்­கைக்­கோள் தொலை­பேசி மூலம் சிக­ரத்தை எட்டி விட்­ட­தாக என்­னி­டம் கூறினார். ஆனால் தன்­னால் திரும்ப முடி­யா­மல் போக­லாம் என்ற கெட்ட செய்­தி­யை­யும் அவர் தெரி­வித்­தார்," என்றார் சுஷ்மா.

அதிக உய­ரத்­தில் ஏற்­ப­டக் கூடிய கடு­மை­யான நோயால் தான் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கண­வர் கூறி­ய­தா­க­வும் அவர் மேலும் தெரி­வித்­தார்.

மறு­நாள் சனிக்­கி­ழமை விடி­யற்­காலை 2.00 மணி­ய­ள­வில் அவ­ரு­டன் இருந்த இரண்டு ஷெர்பா வழி­காட்­டி­களும் மற்­றொரு நப­ரும் மலை உச்­சி­யி­ லிருந்து திரும்­பி­விட்­ட­னர். ஆனால் ஸ்ரீநி­வாஸ் இன்­ன­மும் திரும்­ப­வில்லை.

மலை உச்சியில் இருக்­கும் போது 'ஹேப்' (Hape) எனப்­படும் நுரை­யீ­ர­லில் ஏற்­படும் திர­வப் பெருக்­கும் 'ஹேஸ்' (Hace) எனப்­படும் மூளை­யில் ஏற்­படும் திர­வப் பெருக்­கும் மர­ணத்தை விளை­விக்­க­லாம் என்று தேசிய பல் ­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் ஆலோ­ச­க­ரா­ன டாக்­டர் கும­ரன் ராசப்­பன் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

திரு ஸ்ரீநிவாஸை பாதித்த தாகக் கூறப்படும் 'ஹேஸ்', மனக்குழப்பம், பிரமை, குளறும் பேச்சு, மங்கிய அறிவாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். உயரமான மலையில் இருக்கும் ஒருவருக்கு இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை," என்றும் அவர் கூறினார்.

டாக்டர் குமரனும் 2012ல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்துள்ளார்.