ஜோகூர் ஆற்றில் மூழ்கிய இரு சிறுவர்கள்

ஜோகூர் ஆற்றில் மூழ்கிய இரு சிறுவர்கள்

1 mins read

மலேசியாவின் ஜோகூ­ரில் உள்ள சுங்கை மாசா­யில் ஒரு சிறுவன் ஆற்றில் மூழ்­கி இறந்துவிட்டான். மற்­றொரு சிறுவனைக் காண­வில்லை. வெள்­ளிக்­கி­ழமை இரவு 11.31 மணி­ய­ள­வில் உதவி கேட்டு அழைப்பு வந்­த­தா­கக் கூறிய பாசிர் குடாங் தீய­ணைப்பு, மீட்பு நட­வ­டிக்கை குழு­வின் தள­பதி சர்­ஹான், மொத்­தம் 19 பேர் குழந்தை­க­ளைத் தேடும் பணி­யில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு முழு­வ­தும் தேடும் பணி நடை­பெற்­றது.

சனிக்­கி­ழமை காலை 5.06 மணி­ய­ள­வில் முதல் சிறுவனின் உடல் கண்டுபிடிக்­கப்­பட்­டது.

சிறுவன் ஆற்­றில் விழுந்த இடத்­தி­லி­ருந்து 50 மீட்­டர் தொலை­வில் உடல் மிதந்து கொண்­டி­ருந்­தது.

மருத்­துவ அதி­கா­ரி­கள், 11 வயது சிறுவன் முஹ­மட் டேனிஷ் அஹமட் இறந்­து­விட்­டதை உறுதி செய்­த­னர்.

இதையடுத்து விசாரணைக் காக சிறுவனின் உடல் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு 13 வயது சிறுவனை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திரு சர்ஹான் தெரிவித் தார்.