தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிடாடாரியில் 70% புதிய பிடிஓ வீடுகள் தயார்

2 mins read
87b300b5-264c-4aca-906c-d7332af3d8e4
-

புதிய பிடா­டாரி வீட­மைப்­புப் பேட்­டைக்­கான பணி­கள் நிறைவை நெருங்­கு­கின்­றன. அந்­தப் பேட்­டை­யில் திட்­ட­மி­டப்­பட்­ட­தில் 70 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட பிடிஓ (தேவைக்கேற்ப கட்டி விற் கப்படும்) வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்டு உள்­ளன.

அங்கு மொத்­தம் 8,872 வீடு­க­ளைக் கட்­டு­வது திட்­டம். அவற்­றில் 6,418 வீடு­கள் கட்­டப்­பட்டுவிட்டன.

எஞ்­சிய 2,454 வீடு­கள் 2025ஆம் ஆண்­டு­வாக்­கில் கட்டி முடிக்­கப்­படும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

இதற்­கி­டையே, தீவு முழு­வ­தும் ஐந்து புதிய பிடிஓ திட்­டங் களில் 5,500 வீடு­கள் கட்டப்படும் என்றும் அதற்கான விற்பனை மே 30ஆம் தேதி தொடங்கும் என்றும் அது தெரிவித்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரின் நான்கு வட்­டா­ரங்­களில் 12 பிடிஓ திட்­டங்­கள் தொடங்­கப்­படும் என்று முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்­டது. பிடா­டாரி வீட­மைப்­புத் திட்­ட­மும் இதில் அடங்­கும்.

அல்­காஃப், பார்ட்லி ஹைட்ஸ், பார்க் எட்ஜ், உட்லீ ஆகி­யன அந்த நான்கு வட்­டா­ரங்­கள். இவற்­றில் முத­லா­வ­தாக உட்லீ வட்­டார வீடு­க­ளைக் கட்­டும் பணி­கள் நிறை­வ­டைந்து உள்­ளன. அந்த வட்­டாரத்தின் வீடமைப்பு ஏற்­பா­டு­களை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

312 வாடகை வீடு­கள் உட்­பட 2,685 பிடிஓ வீடு­கள் உட்­லீ­யின் கட்­டப்­பட்டு உள்­ளன. உட்லீ கிளென், உட்லீ ஹில்­சைட் மற்­றும் உட்லீ வில்­லேஜ் ஆகிய மூன்று பிடிஓ திட்­டங்­கள் இந்த வட்­டா­ரத்­தில் இடம்­பெற்று உள்­ள­தாக கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த மூன்று திட்­டங்­க­ளுக்­குட்­பட்ட வீடு­கள் அனைத்­தும் 2022 செப்­டம்­ப­ருக்­கும் 2023 மார்ச்­சுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் கட்டி முடிக்­கப்­பட்­ட­தா­க­வும் அது கூறி­யது.

இந்த வீடு­க­ளைக் கட்­டி­யெ­ழுப்­பும் பணி­கள் 2020க்கு முன்­னரே தொடங்கி­விட்­ட­போ­தி­லும் கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் கட்­டு­மா­னப் பணி­கள் தாம­த­ம­டைந்­தன.

இவ்­வாண்டு ஏப்­ரல் இறுதி வாக்­கில், கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டவை அவற்றை வாங்­கி­யோ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. புதிய வீட்­டுக்­கான சாவியை வீட்டு உரி­மை­யா­ளர்­கள் வாங்­கிச் சென்­ற­னர்.

இதர வட்­டா­ரங்­க­ளைப்­போலவே பிடா­டாரி வட்­டா­ரத்­தின் பிடிஓ திட்­டங்­களும் கொள்ளை­நோ­யால் தாம­த­மடைந்­த­தாக அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

"கொள்­ளை­நோய் கார­ண­மாக வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளின் வாழ்க்­கைத் திட்­டம் பாதிக்­கப்­பட்டுள்­ளது. இருப்­பி­னும், அவர்­கள் பொறு­மை­யு­ட­னும் புரிந்­து­ணர்­வு­ட­னும் காத்­தி­ருந்­த­தற்கு எனது நன்­றி­யைத் தெரி­விக்­கி­றேன்," என்­றார் திரு லீ.

மேலும், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வீட­மைப்­புக்­கான தேவை அதி­க­ரித்து வரு­வ­தற்கு ஏற்ப புதிய வீடு­கள் தொடர்ந்து கட்­டப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

5,500 வீடு­க­ளைக் கட்ட மே 30ஆம் தேதி தொடங்­கப்­பட இருக்­கும் ஐந்து பிடிஓ திட்­டங்­களில் இரண்டு தெங்­கா­வி­லும் மற்­றவை பிடோக், சிராங்­கூன் மற்­றும் காலாங்/வாம்­போ­வி­லும் இடம்பெறும் என்­றார் திரு லீ.