உலகப் பாதுகாப்புக்கு சீனா பெரும் சவால்: பிரிட்டிஷ் பிரதமர்

உலகப் பாதுகாப்புக்கு சீனா பெரும் சவால்: பிரிட்டிஷ் பிரதமர்

1 mins read
b94b5ba7-4b63-452c-9864-31ba7a35699e
-

இந்­தத் தலை­மு­றை­யில் உல­கின் பாது­காப்­புக்­கும் வளப்­பத்­துக்­கும் சீனா பெரும் சவா­லா­கத் திகழ்­கிறது என்று பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனக் தெரி­வித்­துள்ா­ளர்.

ஜப்­பா­னில் நடை­பெ­றும் ஜி7 உச்­ச­நிலை மாநாட்­டில் பங்­கேற்ற பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், சீனா மட்­டுமே உல­கக் கட்­டொ­ழுங்கை மாற்­றி­ய­மைக்­கும் நோக்­கம் கொண்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், இது­போன்ற சவால்­க­ளைத் தணிக்க பிரிட்­ட­னும் இதர ஜி7 நாடு­களும் பொது­வான அணு­கு­மு­றை­யைப் பின்­பற்­றும் என்­றார் திரு சுனக்.

"நமக்­குள் உள்ள அபா­யத்தை நாமே குறைக்­கக்­கூ­டி­ய­வர்­கள் என்­பதை உறுதி செய்ய ஜி7 நாடு­களும் பிற நாடு­களும் இணைந்து செயல்­ப­டு­வோம். மேலும், சீனா­வால் நாம் அனு­ப­வித்த விநி­யோ­கத் தொடர் பாதிப்­பு­கள் இனி­யும் ஏற்­ப­டா­தி­ருக்க ஒத்­து­ழைப்­போம்.

"நாடு­கள் ஒன்றை ஒன்று சேதப்­ப­டுத்­திக்­கொள்வதைத் தவிர்க்க, எதிர்த்­த­ரப்பு செயல்­பா­டு­களில் இருந்து எங்­களை நாங்­களே பாது­காக்­கத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­போம்," என்று அவர் விவ­ரித்­தார்.

இதற்­கி­டையே, ஜி7 மாநாட்­டில் உக்­ரேன் அதி­பர் வெலோ­டி­மிர் ஸெலென்ஸ்­கி­யைச் சந்­தித்த இந்­தி­யப் பிர­த­மர் மோடி, உக்­ரேன் நெருக்­கடி தீர இந்­தியா தன்­னால் ஆன­தைச் செய்­யும் என்று உறு­தி­ய­ளித்­தார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை எடுத்த பின்­னர் இந்த இரு தலை­வர்­களும் நேரில் சந்­தித்­துக்கொள்­வது இதுவே முதல்­முறை.