காற்பந்துத் திடலில் நெரிசல்; 12 பேர் மரணம்

காற்பந்துத் திடலில் நெரிசல்; 12 பேர் மரணம்

2 mins read
e1598dbd-a6e1-4c90-b2cc-5b38aa140d07
-

மத்­திய அமெ­ரிக்க நாடான எல் சல்­வ­டோ­ரின் காற்­பந்­துத் திட­லில் ஏற்­பட்ட நெரி­ச­லில் சிக்கி 12 பேர் உயி­ரி­ழந்­த­னர். தலை­ந­கர் சான் சல்­வ­டோ­ரில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற காற்­பந்­துப் போட்டி ஒன்­றைக் காண முயன்ற கூட்­டத்­தி­ன­ரி­டையே திடீ­ரென்று தள்­ளு­முள்ளு ஏற்­பட்­ட­தாக காவல்­துறை அதி­காரி­கள் கூறி­னர்.

அலி­யான்ஸா, ஃபாஸ் என்­னும் உள்­ளூர் காற்­பந்து அணி­க­ளுக்கு இடை­யில் போட்டி நடை­பெற்­றுக்­கொண்டு இருந்தபோது திட­லின் வாயிற்­க­த­வு­கள் மூடப்­பட்டு இருந்தன. எதிர்பாராத வகையில் வெளியே திரண்ட பெருந்­தி­ர­ளான ரசி­கர் கூட்­டம் திட­லுக்­குள் நுழைய முயன்­ற­போது இந்­தத் துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­த­து. பலரும் கீழே விழுந்து மிதிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்­ப­வம் தொடர்­பான காணொளி, சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது. நுழை­வா­யி­லில் இருந்த தடுப்­பு­களை அகற்ற ரசிகர் கூட்­டம் முயல்வதை அந்­தக் காணொ­ளி­யில் காண­முடிந்­த­தாக பிபிசி செய்தி தெரி­வித்­தது.

யூடி­யூப் ஊட­கத்­தில் காற்­பந்­துப் போட்டி நேர­லை­யா­கக் காண்­பிக்­கப்­பட்­டது. திடீ­ரென்று போட்டி நிறுத்­தப்­ப­டு­வ­தும் அங்­கி­ருந்­த­வர்­கள் அவ­சர அவ­ச­ர­மாக சிலரை மருத்­து­வப் படுக்­கை­களில் கொண்டு செல்­வ­தும் அதில் தெரிந்­தது.

சிறு­வர்­கள் உள்­ளிட்ட 90 பேர் காயங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வ­தாக எல் சல்­வ­டோர் சுகா­தார அமைச்­சர் ஃபிரான்­சிஸ்கோ அலாபி தமது டுவிட்­ட­ரில் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, தேசிய காவல் துறை­யும் தலை­மைச் சட்ட அதி காரி அலு­வ­ல­க­மும் இச்­சம்­ப­வம் தொடர்­பாக தீவிர விசா­ரணை நடத்­தும் என்று எல் சல்­வ­டோர் அதி­பர் நயிப் புக்­கெல் தெரி­வித்­தார்.

காற்­பந்து அணி­யி­னர், அவற்­றின் நிர்­வா­கி­கள், திடல் நிர்­வா­கி­கள், நுழை­வுச்­சீட்டு அலு­வ­லர்­கள், காற்­பந்­துச் சங்­கத்தினர் என்று ஒரு­வர்­ வி­டா­மல் விசா­ரிக்­கப்­படுவர் என்­றும் குற்றவாளி­கள் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­ப­ மு­டி­யாது என்­றும் அவர் கடு­மை­யா­கக் கூறி­னார்.