லாரன்ஸ் வோங்குக்கு ஆக உயரிய மே தின விருது

லாரன்ஸ் வோங்குக்கு ஆக உயரிய மே தின விருது

1 mins read
ce8a796e-731c-4d2e-a488-b85fb059d89c
-

ஊழி­யர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரின் அர­சாங்­கம், நிறு­வ­னங்­கள், தொழிற்­சங்­கங்­கள் ஆகி­ய­வற்­றின் முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­துவத்­துக்­கும் வலு­வாக ஆத­ர­வுக்­கு­ரல் எழுப்­பி­வ­ரும் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங்­குக்கு இவ்­வாண்­டின் ஆக உய­ரிய மே தின விரு­தான கௌர­வப் பதக்­கம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தொழி­லா­ளர் இயக்­கத்­திற்கு உய­ரிய சேவை­யாற்­றி­யுள்ள நபர்­க­ளுக்கு தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) கௌர­வப் பதக்­கம் வழங்­கப்­பட்டு வரு­கிறது.

ஊழி­யர்­க­ளின் திறன் மேம்­பாடு, ஊதிய உயர்வு ஆகி­ய­வற்­று­டன் கொவிட்-19 கொள்­ளை­நோ­யின்­போது வேலை­க­ளைக் காப்­பாற்­ற­வும் திரு வோங் முற்­பட்­டார்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நில­விய கொவிட்-19 கொள்­ளை­நோய் கால­கட்­டத்­தில் நிச்­ச­ய­மற்ற சூழலை சிங்­கப்­பூர் கடந்­து­வர ஒரு வழி­காட்­டி­யாக திரு வோங் இருந்­த­தாக நேற்று நடை­பெற்ற வரு­டாந்­திர மே தின விரு­த­ளிப்பு நிகழ்ச்சி­யில் என்­டி­யு­சி­யின் தலை­வர் மேரி லியூ குறிப்­பிட்­டார்.

"கொள்­ளை­நோய்க்­குப் பிறகு சவால்­மிக்க ஒரு சூழ­லில் 4ஜி குழுவை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு இடையே ஊழி­யர்­க­ளின் கவ­லை­க­ளுக்­கும் தொடர்ந்து முன்­னு­ரிமை அளித்து வரு­ப­வர் திரு வோங்," என்­றார் திரு­வாட்டி லியூ.

சன்­டெக் மாநாட்டு மையத்­தில் நடை­பெற்ற விரு­த­ளிப்­பில் திரு வோங் உள்­பட தொழிற்­சங்­கத் தலை­வர்­கள், முத்­தரப்­புப் பங்­கா­ளி­கள் என மொத்­தம் 172 பேர் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­னர்.