சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை ஏறுமுகம்

சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை ஏறுமுகம்

1 mins read
b9c3f74b-4351-43d1-9c34-710e632eaa52
கடந்த ஏப்­ர­லில் இங்கு வந்த சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை 1.13 மில்­லி­ய­னுக்­குக் கூடி­யது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ருக்கு வந்த சுற்­றுப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த ஏப்­ரல் மாதத்­தில் தொடர்ந்து ஒரு மில்­லியனைத் தாண்­டி­யது. 2023ல் தொடர்ந்து இரண்­டா­வது மாத­மாக அந்த எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னைக் கடந்­தது. அத்­து­டன் 2020ல் கொவிட்-19 கிருமிப்­ப­ர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை ஒரு மில்­லி­ய­னைத் தாண்­டி­யி­ருப்­பது இது இரண்­டா­வது முறை.

கடந்த ஏப்­ர­லில் இங்கு வந்த சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை 1.13 மில்­லி­ய­னுக்­குக் கூடி­யது. அதற்கு முந்­தைய மாதத்­தில் பதி­வான 1.02 மில்­லி­ய­னைக் காட்­டி­லும் இது அதி­கம்.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி இது தெரி­ய­வந்­துள்­ளது.

ஏப்­ரல் மாதம் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை, கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­னர் 2020ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில் பதி­வான 1.7 மில்­லி­ய­னை­விட குறை­வாக இருந்­தா­லும் கிரு­மிப்­ப­ர­வலுக்­குப் பிந்­தைய கால­கட்­டத்­தில் புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் வரும் சுற்­றுப்­ப­ய­ணி­களின் பட்­டி­ய­லில், இந்­தோ­னீ­சியா 13வது மாத­மாக முன்­னணி வகிக்­கிறது. சிங்­கப்­பூருக்கு வந்த இந்­தோ­னீ­சிய சுற்­றுப்­பயணி­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஏப்­ர­லில் 220,067ஆகப் பதி­வா­னது. அதற்கு முந்­தைய மாதத்­தில் பதி­வான 171,507ஐ விட இது அதி­கம்.

அடுத்­த­ப­டி­யாக, பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் மலே­சியா இடம்­பெற்­றுள்­ளது. அங்­கி­ருந்து, 98,190 வரு­கை­யா­ளர்­கள் சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­த­னர். கடந்த மார்ச் மாதத்­தில் பதி­வான 97,835ஐ விட அது அதி­கம். தொடர்ச்சி­யாக இரண்­டா­வது மாத­மாக மூன்­றாம் இடத்­தில் வந்­துள்­ளது, இந்­தியா. ஏப்­ரலில் இந்­தி­யா­வி­லி­ருந்து இங்கு வந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 97,029. அதற்கு முந்­தைய மாதத்­தில் பதி­வான 75,338ஐக் காட்­டி­லும் அது அதி­கம்.