ரூ.2000 நோட்டு பரிமாற்றம் தொடக்கம்

ரூ.2000 நோட்டு பரிமாற்றம் தொடக்கம்

2 mins read
6a4eaecc-995c-4f89-bed1-aef806897446
-

இந்­தி­யா­வில் ரூ.2000 நோட்­டு­களைக் கொடுத்து சிறிய மதிப்­பி­லான நோட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான சேவை நேற்று தொடங்­கி­யதை முன்­னிட்டு, அனைத்து மாநி­லங்­க­ளி­லும் வங்­கி­கள் தயார்­நி­லை­யில் இருந்­தன.

அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­களின் வரு­கையை எதிர்­பார்க்­கும் வங்­கி­கள், கூட்ட நெரி­சலைச் சமா­ளிக்க பாது­காப்பை அதி­க­ரித்­துள்­ளன. மேலும், சிறிய மதிப்­பு­டைய நோட்­டு­கள் போதிய இருப்­பில் இருப்­பதை அவை உறுதி­செய்துள்ளன.

இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநிலம், அக­ம­தா­பாத்­தில் பொதுத்­துறை வங்­கி­யின் மண்டல நிர்­வாகி ஒரு­வர், "சனிக்­கிழமை காலை நாங்­கள் கண்ட கூட்­டத்­தைப்­போல அதி­க­மானோர் வரு­வதை எதிர்­பார்க்­கி­றோம். ஆனால், 2016ல் பண மதிப்­பி­ழப்பு அறி­விக்­கப்­பட்­ட­போது ஏற்­பட்ட கூச்­சல், குழப்­பம் இப்­போது ஏற்­படாது என நம்­பு­கி­றோம். ஏனெ­னில், புழக்­கத்­தில் உள்ள ரூ.2000 நோட்­டு­க­ளின் எண்­ணிக்கை, ரூ.500, ரூ.1000 நோட்­டு­க­ளை­விடக் குறைவு.

மகா குஜ­ராத் வங்கி பொதுச் செய­லா­ள­ரான ஜனாக் ரவல், "பெரும்­பா­லான வங்­கி­களில் ஊழி­யர் பற்­றாக்­குறை நில­வும் வேளை­யில், ரூ.2000 நோட்டு பரி­மாற்­றத்­துக்­காக போதிய ஊழி­யர்­கள் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வதை உறு­தி­செய்­யும்­படி மண்­டல நிர்­வா­கி­க­ளுக்கு நினை­வூட்­டி­யுள்­ளோம்.

"அனைத்­துக் கிளை­க­ளி­லும் நோட்டு எண்­ணும் இயந்­தி­ரங்­கள் இருப்­பதை உறு­தி­செய்­யு­மாறு வங்கி மேலா­ளர்­க­ளி­டம் வலி­யுறுத்­தி­யுள்­ளோம்," என்­றார்.

குஜ­ராத் நக­ராண்மை கூட்டுறவு வங்­கி­கள் சம்­மே­ள­னத் தலை­வர் ஜோதிந்­திரா மேத்தா, "கூட்டுறவு வங்கி எதி­லும் ரூ.2000 நோட்­டு­க­ளைப் பரி­மாற்றிக்­கொள்­வ­தில் வாடிக்­கை­யாளர்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டாது. குறைந்த மதிப்­பு­டைய நோட்­டு­கள் போது­மானவை இருக்­கும்," என்று சொன்­னார்.

அக­ம­தா­பாத்­தில் மட்­டும் தனி­யார், பொதுத்­துறை வங்­கி­க­ளி­டம் ரூ.50 கோடி முதல் ரூ.1500 கோடி வரை ரொக்க இருப்பு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், நோட்­டு­களை மாற்­றிக்­கொள்ள அடை­யாள ஆவ­ணங்­க­ளைக் காட்­டு­வது அவ­சி­யமா என்­பது பற்­றிய குழப்பம் மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு உள்­ளது.

"நோட்­டு­களை மாற்­றிக்­கொள்ள அடை­யாள ஆவ­ணங்­களைக் காட்­டத் தேவை­யில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி குறிப்­பிட்­டுள்­ளது.

"ஆனால், நோட்டு பரி­மாற்­றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இணை­யப் பக்­கத்­தில் வழி­காட்டி எது­வும் இடம்­பெ­ற­வில்லை," என்று அக­ம­தா­பாத்­தைச் சேர்ந்த நிபு­ணர் ஜெய்தீப் ஸிலாகா கூறி­னார்.