தமிழ்நாட்டில் அமரர் லீக்கு நினைவுச்சின்னம்

2 mins read
c67bb51d-6c3c-4a7d-b42c-fa58bc7c9480
-
multi-img1 of 2

மன்னார்குடியில் சிலையும் நூலகமும் அமைக்கப்படும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆ. விஷ்ணு வர்­தினி

மறைந்த பிர­த­மர் லீ குவான் இயூ­வின் மகத்­து­வத்­தை­யும் உன்­னத பங்­க­ளிப்­பு­க­ளை­யும் பறை­சாற்­றும் வகை­யில் தமிழ்­நாட்­டில் அவ­ருக்கு நினை­வுச்­சின்­னம் எழுப்­பப்­பட இருக்­கிறது.

மன்­னார்­கு­டி­யில் திரு லீயின் திருவுருவச் சிலை­யும் அவ­ரது பெய­ரில் நூல­க­மும் அமைக்­கப்­படும் என்று தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

அதி­கா­ர­பூர்­வப் பய­ண­மாக சிங்­கப்­பூ­ருக்கு வருகைபுரிந்த திரு ஸ்டா­லி­னுக்கு சிங்­கப்­பூர்த் தமிழ் அமைப்­பு­கள் சார்­பில் நேற்று மாலை சன்­டெக் சிட்டி மாநாட்டு, கண்­காட்சி மையத்­தில் பெரும் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

உல­கெங்­கும் பரவி வாழ்ந்து ­வ­ரும் புலம்­பெ­யர் தமி­ழர்­களுக்கு அர­ணா­கத் தமி­ழ­கம் விளங்­கும் என்­பதை எடுத்­து­ரைப்­ப­தாக அமைந்­தது முதல்­வரின் உரை.

சிங்­கப்­பூர்த் தமிழ் மக்­க­ளை­யும் பண்­பாடு ததும்­பும் சூழ­லை­யும் பாராட்­டிய அவர், "கடல் கடந்து நான் வந்­தது போலன்றி, தமிழ்­நாட்­டி­லேயே இருப்­பது போன்ற உணர்வே இருக்­கின்­றது," என்று குறிப்­பிட்­டார்.

தமி­ழு­ணர்­வால் இணைந்து, சாதி, மதம் பிள­வு­ப­டுத்த முடியா சிங்­கப்­பூர் சமூ­கத்தை வளர்த்­தெ­டுப்­ப­தில் அம­ரர் லீ, பின்­னர் திரு கோ சோக் டோங், இப்­போது திரு லீ சியன் லூங் ஆகிய சிங்­கப்­பூர் பிர­த­மர்­க­ளின் பெரும்­பங்­கை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

மறைந்த முன்­னாள் அதி­பர் எஸ் ஆர். நாதன் நாட்டு நிர்­வா­கத்­தில் மேற்­கொண்ட பணியை திரு ஸ்டா­லின் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

சீர்­தி­ருத்­தச் சங்­கத்தை ஏற் படுத்தி, முதல் தமிழ் நாளி­த­ழாக தமிழ் முர­சைத் தோற்­று­வித்து, தமி­ழர் திரு­நாள் கொண்­டாட்­டங்­க­ளைத் தொடங்கி, சிங்­கப்­பூ­ரில் தமி­ழர்­க­ளின் வளர்ச்­சிக்­கும் முன்­னேற்­றத்­திற்­கும் முக்­கி­யக் கார­ண­மா­கத் திகழ்ந்த தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணி­யின் பெரும் பங்­க­ளிப்பை அவர் குறிப்­பி­டத் தவ­ற­வில்லை.

தாம் தொடங்­கிய அயலகத் தமி­ழர் நல வாரி­யத்­தின் திட்­டங்­கள் தொடர்ந்து வெளி­நாட்டுத் தமி­ழர்­களை அர­வ­ணைக்­கும் என்றார் அவர்.

கலை­யி­யல், பண்­பாட்­டுப் பரி­மாற்­றங்­கள், இளை­யர் சுற்­றுலா ஏற்­பா­டு­கள், கண்­காட்­சி­கள் உள்­ளிட்ட சிங்­கப்­பூர்த் தமிழ் மக்­க­ளின் கோரிக்­கை­க­ள் பரிசீலிக்கப்படும் என்றும் திரு ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சிறப்பு விருந்­தி­ன­ரா­க கலந்து­கொண்ட சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், "தற்­போது 280 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக உள்ள தமிழ்­நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியை (ஜிடிபி) ஒரு டிரில்­லி­யன் டாலராக உயர்த்த முதல்­வர் ஸ்டா­லின் இலக்கு கொண்­டுள்­ளார். மிக விரை­வில் சிங்­கப்­பூரை­விட தமிழ்­நாட்­டின் ஜிடிபி அதி­க­மா­கும் என நம்­பு­கி­றேன்," என்­றார்.

பண்­பாட்­டுச் சுற்­று­லாத் தள­மாக விளங்­கும் தமிழ்­நாட்­டிற்கு சிங்­கப்­பூர் தமி­ழர்­கள் வந்து செல்ல வேண்­டும் என்று தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ளர் முனைவர் வெ. இறை­யன்பு கேட்­டுக்­கொண்­டார்.

ஏறத்­தாழ 60 தமிழ் அமைப்­பு­கள் சேர்ந்து, இந்­நி­கழ்வை முன்­னெ­டுத்­த­தாக ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வ­ரும் முன்­னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு ஆர். ரவீந்­தி­ரன் தெரி­வித்­தார்.