பள்ளி வளாகத்தில் ஆசிரியரின் கார் மோதி மாணவர் உயிரிழப்பு

1 mins read

பள்ளி வளா­கத்­தி­னுள்­ளேயே ஆசி­ரி­ய­ரின் கார் மோதி தொடக்­க­நிலை ஒன்­றில் பயி­லும் மாண­வர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் சீனா­வின் வூஹா­னில் நிகழ்ந்­தது. விரைந்து மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­போ­தும் அக்­கு­ழந்­தை­யின் உயி­ரைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நிகழ்ந்த விபத்தில் மாண்ட அம்­மா­ண­வர் ஆணா பெண்ணா என்­பது தெரி­ய­வில்லை. அவரது பெயரும் வெளியிடப்படவில்லை.

சம்­பவ நாளன்று, பள்­ளி­யில் அக்­கு­ழந்தை நண்­ப­கல் உணவு அருந்திக்கொண்­டி­ருந்தார் என்று அவ­ரின் தாயார் கூறி­ய­தாக உள்­ளூர் ஊட­கச் செய்தி குறிப்­பிட்­டது.

கீழ்த்­த­ளத்­தில் இருந்து தமது காரை ஓட்­டிச் சென்ற அந்த ஆசி­ரி­யர், சக ஆசி­ரி­ய­ருக்­கா­கக் காத்­தி­ருக்­கும் பொருட்டு வாயி­லுக்­குப் 10 மீட்­டர் முன்­ன­தா­கவே தமது காரை நிறுத்­தி­விட்­டார்.

அப்­போது, அக்­கு­ழந்தை ஓடி வந்து அக்­கா­ருக்கு முன்­னால் மண்­டி­யிட்டு இரண்டு நிமி­டங்­களாக அமர்ந்திருந்ததாகவும் தம் நண்­பர் வந்­த­தும் அந்த ஆசி­ரி­யர் காரை இயக்­கி­ய­போது அது அக்­கு­ழந்­தை­மீது மோதி­ய­தா­க­வும் கல்வி அமைச்சு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த ஆசி­ரி­யர் மது­போ­தை­யில் இருந்­தாரா என்று பிள்­ளை­யைப் பறி­கொ­டுத்த பெற்­றோர் கேள்­வி­யெ­ழுப்­பி­னர். ஆனால், அந்த ஆசி­ரி­யர் காலை­யில் வகுப்­பில் இருந்­தார் என்­றும் நண்­ப­கல் உணவு வேளை­யில் அவர் மது அருந்­த­வில்லை என்­றுச்ம் கூறப்­பட்­டது.

விபத்து தொடர்பில் இருபது வய­து­களில் இருக்கும் அந்த ஆசி­ரி­ய­ரைக் காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.