சிங்கப்பூர்த் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சிங்கப்பூர்த் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

2 mins read
1b714d38-3c7e-4035-adf3-4037a9004ba7
-

சிங்­கப்­பூர்வாழ் தமி­ழர்­கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களை நிறை­வேற்­றித் தரு­வ­தாக உறு­தி­அளித்­தார் தமிழ்­நாடு முத­ல­மைச்சர் மு.க. ஸ்டா­லின்.

முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் சில­வற்றை தமி­ழக அரசு ஏற்­கெ­னவே செயல்­ப­டுத்தி வரு­வதைக் குறிப்­பிட்ட அவர் தமி­ழுக்­கும் தமி­ழ­ருக்­கு­மான தம் பணி தொட­ரும் என்­றும் தெரி­வித்­தார்.

அதி­கா­ர­பூர்­வப் பய­ண­மாக சிங்­கப்­பூர் வந்­தி­ருந்த திரு ஸ்டா­லின் நேற்று காலை ஜப்­பா­னுக்­குப் புறப்­படும் முன் ஒரு­சில சந்திப்­பு­களை நடத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரின் மூத்த தமி­ழ­றி­ஞர் சுப. திண்­ணப்­பன் சந்­தித்து பேசி­ய­போது தமிழ்ப் பண்­பாட்டை உல­குக்­குக் காட்­சிப்­ப­டுத்­தும் கீழடி அருங்­காட்­சி­ய­கத்­தின் சிறப்பைப் போற்­றி­ய­து­போல பொருநை அருங்­காட்­சி­ய­கம் சிறப்­புற அமைய தம்­மு­டைய வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­தார்.

இச்­சந்­திப்­பில் திரு ஸ்டா­லின் தன்­னு­டைய வாழ்க்கை வர­லாற்று நூலான 'உங்­களில் ஒரு­வன் - முதல் பாகம்' புத்­த­கத்தை திரு சுப. திண்­ணப்­ப­னுக்கு நினை­வுப் பரி­சாக வழங்­கி­னார்.

முன்­ன­தாக, சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கத்­து­டன் சந்­திப்பு நடத்­திய திரு ஸ்டா­லின், இணை­யப் பாது­காப்பு, வேலை தேடும் இளை­யர்­க­ளுக்­குத் திறன் மேம்­பாடு உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்து பேசி­ய­தா­கத் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார். புதன்­கி­ழமை நடந்த சிங்­கப்­பூர்த் தமிழ் அமைப்­பு­கள் நடத்­திய வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றி­ய­போது அமைச்­சர் சண்­மு­கம் முன்­வைத்த மது­ரைக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான நேரடி விமான இணைப்பு குறித்து இந்­திய அர­சி­டம் தெரி­வித்து ஆவன செய்ய முயற்­சிப்­ப­தாக நம்­பிக்­கை தெரி­வித்­தார் திரு ஸ்டா­லின்.

விமான நிலை­யம் செல்­லும் வழி­யில் லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள உண­வ­கத்­தில் திரு ஸ்டாலின் தேநீர் அருந்­தி­னார்.