நேரலையின்போது தாக்குதல்; துண்டானது கை

நேரலையின்போது தாக்குதல்; துண்டானது கை

1 mins read

சீனா­வில் சமூக ஊட­கம் வாயி­லாக நேர­லை­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த இரண்டு உயர்­கல்வி மாண­வர்­கள் கத்­தி­யால் தாக்­கப்­பட்­ட­னர்.

இதில் ஒரு மாண­வ­ரின் கை துண்­டிக்­கப்­பட்­டது. இன்­னொரு மாண­வ­ருக்கு முது­கில் காயங்­கள் ஏற்­பட்­ட­தாக சீன ஊட­கம் தெரி­வித்­தது.

கல்­லூரி ஒன்­றில் அந்த இரு­மா­ண­வர்­களும் இணை­ய­வா­சி­களு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது கறுப்பு டீ-சட்டை அணிந்த ஒரு­வர் அவர்­களை விரட்டி விரட்­டித் தாக்­கி­னார். அந்த இரு மாண­வர்­க­ளு­டன் அவர் முன்பு வாக்­கு­வா­தத்­தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.

சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்­பிய ஆட­வர் பிறகு கைது செய்­யப்­பட்­டார். இந்­தத் தாக்­கு­தல் குறித்து சீனக் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.