தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஐஏ விமானங்களில் மீண்டும் 'எப்பிடைசர்ஸ்'

1 mins read

அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லிருந்து சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) விமா­னங்­க­ளின் இக்கானமிப் பிரி­வு­களில் 'எப்­பி­டை­சர்ஸ்' எனப்­படும் பசி­யைத் தூண்­டக்­கூ­டிய உண­வு­வ­கை­கள் பரிமாறப்படுவது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

குறைந்­தது மூன்­றரை மணி நேரப் பய­ணத்தை மேற்­கொள்­ளும் விமா­னங்­களில் மட்­டுமே 'எப்­பி­டை­சர்ஸ்' வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­களில் அவை பரி­மாறப்­ப­ட­வில்லை.

இதற்கு விநி­யோ­கப் பிரச்­சினை­க­ளு­டன் வேறு சில கார­ணங்­களும் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

குறைந்­தது மூன்­றரை மணி நேரப் பய­ணத்தை மேற்­கொள்­ளும் எஸ்­ஐஏ விமா­னங்­க­ளின் இக்­கான­மிப் பிரி­வு­களில் எப்­பி­டை­சர்­சு­டன் உண­வும் பரி­மா­றப்­படும்.

பிர­தான உண­வு­வ­கை­யு­டன் ரொட்­டித் துண்டு, 'சீஸ்' எனப்­படும் பாலா­டைக்­கட்டி, பிஸ்­கட்டு­கள், இனிப்­புப் பண்­டங்­கள் ஆகி­யவை பய­ணி­க­ளுக்­குத் தரப்­படும் என்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வ­னத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.