'ஹிஜாப்' தடை நீக்கப்படக்கூடும்

2 mins read

கர்­ட­நா­ட­கா­வின் புதிய காங்­கி­ரஸ் அர­சாங்­கம் தொடக்­கப்­பள்­ளி­க­ளி­லும் உயர்­நி­லைப்­பள்­ளி­க­ளி­லும் முஸ்­லிம் மாண­வி­கள் 'ஹிஜாப்' எனப்­படும் தலை­யங்­கியை அணி­யக்­கூ­டாது என்று விதிக்­கப்­பட்ட தடையை நீக்­கு­வது குறித்து பரி­சீ­லித்து வரு­கிறது.

அம்­மா­நி­லத்­தில் இதற்கு முன்பு பாஜக ஆட்­சி­யில் இருந்­த­போது முஸ்­லிம் மாண­வி­கள் தலை­யங்கி அணி­யக்­கூ­டாது என்ற சுற்­ற­றிக்கை அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது.

ஆர்­எஸ்­எஸ், பஜ்­ரங்தள் போன்ற அமைப்­பு­கள் கர்­நா­ட­கா­வின் அமை­தியை சீர்­கு­லைக்­கும் வகை­யில் நடந்­து­கொண்­டால் அவற்­றைத் தடை செய்ய காங்­கி­ரஸ் அர­சாங்­கம் தயங்­காது என்று கர்­நா­ட­கா­வின் மூத்த மாநில அமைச்­சர் பிரி­யங்க் கார்கே எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

"கர்­நா­ட­கா­வைச் சொர்க்­க பூமி­யாக மாற்ற தேர்­த­லின்­போது அம்­மா­நில மக்­க­ளுக்கு வாக்­குறுதி அளித்­தோம். எனவே, அமை­தி­யைச் சீர்­கு­லைக்­கும் வகை­யில் நடந்­து­கொண்­டால் அது பஜ்­ரங்தள்ளாக இருந்­தா­லும் சரி, மற்ற இந்­துத்­துவா அமைப்­பு­க­ளாக இருந்­தா­லும் சரி, தடை விதிக்­கப்­படும்," என்று திரு கார்கே தெரி­வித்­தார்.

ஆர்­எஸ்­எஸ் அமைப்பு பற்றி அவ­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது, "சட்­டத்தை மீறு­ப­வர் யாராக இருந்­தா­லும் அவர்­களுக்கு எதி­ராக சட்­டம் பாயும். கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக சட்­டத்­தைப் பற்­றியோ காவல்­துறை­யைப் பற்­றியோ எவ்­வித பய­மின்றி சில அமைப்­பு­கள் செயல்­பட்டு வந்­தன.

"தலை­யங்­கித் தடை, பாட­நூல் மறு­ஆய்வு உட்­பட அனைத்து சட்­டங்­க­ளை­யும் காங்­கி­ரஸ் அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்­யும். இதற்கு முன்பு ஆட்சி அதி­கா­ரத்­தில் இருந்த பாஜக நடை­மு­றைப்­ப­டுத்­திய பசு­வ­தைச் சட்­டம், மத­மாற்­ற எதிர்ப்­புச் சட்­டம் ஆகி­ய­வை­யும் மறு­ஆய்வு செய்­யப்­படும்.

"இந்­தச் சட்­டங்­கள் சர்ச்­சைக்­கு­ரி­ய­வை­யா­க­வும் சமூ­கத்­தைப் பிள­வு­ப­டுத்­தும் வகை­யில் இருப்­ப­தா­க­வும் உள்­ளது என்று கண்­ட­றி­யப்­பட்­டால் அவை நீக்­கப்­ப­ட­லாம்," என்­றார் திரு கார்கே.