அடுக்குமாடி வீட்டில் தீ; 40 பேர் வெளியேற்றம்

அடுக்குமாடி வீட்டில் தீ; 40 பேர் வெளியேற்றம்

1 mins read
6c8cb216-cf49-4cb6-a795-fa903b35925a
-
multi-img1 of 2

சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் உள்ள கியட் ஹொங் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு ஒன்­றில் நேற்­றுக் காலை தீ மூண்­ட­தைத் தொடர்ந்து கிட்­டத்­தட்ட 40 குடி­யி­ருப்­பா­ளர்­கள் அவ­ர­வர் வீடு­களில் இருந்து அவ­ச­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

கியட் ஹொங் குளோஸ் புளோக் 803ல் தீப்­பி­டித்­த­தாக காலை 10 மணி­ய­ள­வில் தனக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. அந்த புளோக்­கின் நான்­கா­வது தளத்­தில் உள்ள ஒரு வீட்­டின் சமை­ய­ல­றை­யில் தீப்­பி­டித்து எரிந்­தது.

அதனை அணைக்க கிள­மெண்டி மற்­றும் புக்­கிட் பாத்­தோக் தீய­ணைப்பு நிலை­யங்­களில் இருந்து தீய­ணைப்பு வீரர்­கள் விரைந்து சென்­ற­னர். வீட்­டின் மற்ற அறை­க­ளுக்­கும் தீ பர­வி­ய­தால் அங்­கி­ருந்த பொருள் ­கள் கருகி சேத­ம­டைந்­தன. அந்த வீட்­டில் இருந்த இரு­வர், தீய­ணைப்­புப் படை­யி­னர் வரு­முன்­னரே வெளி­யேற்­றப்­பட்டு விட்­ட­னர். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அக்­கம்­பக்க வீடு­க­ளைச் சேர்ந்த 40 குடி­யி­ருப்­பா­ளர்­களும் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

தீப்­பி­டித்த வீட்­டைச் சேர்ந்­த­வர் என்று நம்­பப்­படும் ஒரு­வர் புகையை சுவா­சித்­த­தால் ஏற்­பட்ட உடல்­ந­லப் பிரச்­சி­னை­களை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மருத்­து­வக் குழு­வி­னர் கையாண்­ட­னர்.

இருப்­பி­னும் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல அவர் மறுத்­து­விட்­டார். அந்த வீட்­டில் தீப்­பி­டித்­த­தற்­கான கார­ணத்தை அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.