ரஷ்யாவை முழுவீச்சுடன் தாக்க உக்ரேன் தயார்

ரஷ்யாவை முழுவீச்சுடன் தாக்க உக்ரேன் தயார்

1 mins read
2e769be6-5dbb-46e2-9c74-c395bd12c681
-

ரஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ராக முழு­வீச்­சில் தாக்­கு­தல்­க­ள் தொடுத்து அவற்­றைத் தனது மண்­ணி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்க உக்­ரேன் தயா­ராக இருப்­ப­தாக அந்­நாட்­டின் தேசிய பாது­காப்பு மன்­றச் செய­லா­ளர் ஒலெக்சி டேனி­லோவ் பிபிசி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் தாக்­கு­தலை உக்­ரேன் எப்­போது தொடங்­கும் என்று அவர் தெரி­விக்­க­வில்லை.

"தாக்­கு­தல் நாளை தொடங்­கலாம், மறு­நாள் தொடங்­கலாம், அல்­லது ஒரு வாரம் கழித்­துக்­கூட தொடங்­கலாம்," என்று அவர் கூறி­னார்.

ரஷ்­யா­வைத் தாக்­கு­வ­தைத் தவிர உக்­ரே­னுக்கு வேறு வழி இல்லை என்று அவர் தெரி­வித்­தார். எனவே, ரஷ்­யா­வைத் தாக்க எடுக்­கப்­பட்ட முடி­வி­லிருந்து உக்­ரேன் பின்­வாங்­கக்­கூடாது என்­றும் பின்­வாங்­கி­னால் அது மிகப் பெரிய தவ­றா­கி­வி­டும் என்­றும் திரு டேனி­லோவ் எச்­ச­ரித்­தார். ரஷ்­யா­வைத் தோற்­க­டிக்க கிடைத்­தி­ருக்­கும் வர­லாற்று சிறப்­பு­மிக்க வாய்ப்பை உக்­ரேன் நழு­வ­விட்­டு­வி­டக்­கூடாது என்­றார் அவர்.

அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் ராணுவ உயர் அதி­கா­ரி­களுடன் வியூ­கம் வகுக்­கும் உக்ரேன் அதி­பர் ஸெலென்ஸ்கி.

படம்: ஏஎ­ஃப்பி