கருணாநிதி துர்கா
தரமான, கட்டுப்படியான மருத்துவ வசதிகளை வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்க 'சாட்டா கோம்ஹெல்த்' புதிய மருத்துவ நிலையம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது.
கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவ வசதிகளை வெளிநாட்டு ஊழியர்கள் எளிதில் நாடலாம்.
முதன்மை பராமரிப்புத் திட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக இந்த மருத்துவ நிலையம் மனிதவள அமைச்சால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மருத்துவச் செலவைக் குறைக்கவும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைக்கும் மருத்துவச் சேவை தரத்தை மேம்படுத்தவும் அர்த்தமுள்ள முன்னேற்றங்களை ஏற்படுத்த உள்ளது.
இதற்கு ஏற்றாற்போல மருந்துகள் உட்பட மருத்துவ சேவைக்கு ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய மருத்துவக் கட்டணம் அதிகபட்சம் $5 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதாகப் பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் பரிந்துரைப்படி இவற்றால் பாதிக்கப்பட்டோருக்குப் பதிவு, ஆலோசனைக்கான பகுிகள் தனியாக அமைக்கப்
பட்டுள்ளன.
புதிய நிலையத்தில் இவ்வெளிநாட்டு ஊழியர்களுக்காக மன
நலம், உளவியல் சார்ந்த சேவைகளும் வழங்கவிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் வருகை புரிந்
திருந்தார்.
"ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது தாய்மொழியில் இங்குள்ள சுகாதார பணியாளர்களிடம் பேசலாம்.
"இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களால் மருத்துவரின் ஆலோசனை, சிகிச்சை முறை, மருந்துகளைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்," என்று டாக்டர் கோ கூறினார்.