தெங்காவில் நாளை விற்பனைக்கு வரும் 3,000 பிடிஓ வீடுகள்

தெங்காவில் நாளை விற்பனைக்கு வரும் 3,000 பிடிஓ வீடுகள்

1 mins read
f2bfab9d-e4d6-408d-acb4-9e06c980467b
-

தெங்கா வட்­டா­ரத்­தில் 'பிடிஓ' எனப்­படும் தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­கள் நாளை விற்­ப­னைக்கு விடப்­ப­ட­வுள்­ளன.

பார்க் மெடோ அட் தெங்கா, பிளான்டேஷன் வெர்ஜ் எனும் இரண்டு குடி­யி­ருப்­பு­க­ளின்­கீழ் ஏறக்­கு­றைய 3,000 வீடு­கள் தெங்­கா­வில் விற்­ப­னைக்கு விடப்­படும்.

அவற்­றுக்­கான காத்­தி­ருப்பு காலம் நான்கு ஆண்­டு­க­ளுக்­குக் குறைவு என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) தெரி­வித்­தது.

தெங்கா வட்­டார வீடு­க­ளை­யும் சேர்த்து நாளை கிட்­டத்­தட்ட 5,500 வீடு­கள் விற்­ப­னைக்கு அறி­விக்­கப்­பட உள்­ளன.

மற்ற வீடு­கள் பிடோக், சிராங்­கூன், காலாங்/வாம்போ ஆகிய வட்­டா­ரங்­களில் அமை­ய­வி­ருக்­கின்­றன.

பார்க் மெடோ அட் தெங்­கா­வில் ஏறத்­தாழ 2,000 வீடு­கள் கட்­டப்­படும். அவற்­றுக்­கான காத்­தி­ருப்பு காலம் ஏறக்­கு­றைய மூன்று ஆண்­டு­கள்.

2030ஆம் ஆண்டு ஆங்­கிலோ-சீனத் தொடக்­கப் பள்ளி இடம் மாறும்­போது அந்­தக் குடி­யி­ருப்பு அப்­பள்­ளி­யில் இருந்து 1 கிலோ­மீட்­டர் தொலை­விற்­குள் அமைந்­தி­ருக்­கும்.

பிளான்டேஷன் வெர்ஜ் குடி­யி­ருப்­புக்கு அருகே பிள்­ளைப் பரா­ம­ரிப்பு நிலை­யம், புக்­கிட் பாத்­தோக் நகர மையம் ஆகி­யவை அமைந்­தி­ருக்­கும் என்று வீவக கூறி­யது.

அக்கம்பக்க நிலையம், சமூக மன்றம், புதிதாகக் கட்டப்படும் பள்ளிகள், பேருந்து முனையம், எம்ஆர்டி நிலையம் ஆகியவையும் அருகில் அமைந்திருக்கும்.

இவ்­விரு குடி­யி­ருப்­பு­க­ளை­யும் சேர்த்து 2018க்குப் பிறகு இது­வரை மொத்­தம் 21,000 வீடு­கள் தெங்­கா­வில் விற்­ப­னைக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.