புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்து செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி

இந்­திய நாடா­ளு­மன்­றத்­துக்­கான புதிய கட்­ட­டத்­தைப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று திறந்து வைத்­தார். பழைய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­துக்கு அரு­கி­லேயே அமைக்­கப்­பட்­டுள்ள அக்­கட்­ட­டம் 1,250 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்­ளது.

நான்கு மாடி­க­ளு­டன் ஏறக்­குறைய 65,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அது கட்­டப்­பட்­டுள்­ளது. அனைத்து மாநி­லங்­க­ளின் சிறப்­பம்­சங்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய கட்­ட­டக்­க­லை­யைப் பயன்­படுத்­திக் கட்­டப்­பட்­டுள்ள புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தில் மொத்­தம் 1,272 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர முடி­யும்.

முதற்­கட்­ட­மாக நேற்­றுக் காலை 7.30 மணிக்கு நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்­புப் பூசை யுடன் நிகழ்ச்சி தொடங்­கி­யது.

தமிழ் மறை­கள் முழங்க, தமிழ்­நாட்­டைச் சேர்ந்த திரு­வா­வ­டு­துறை, மதுரை உள்­ளிட்ட 20 ஆதீ­னத் தலை­வர்­கள் செங்­கோ­லைப் பிர­த­ம­ரி­டம் வழங்­கி­னர். அவர்­க­ளி­டம் ஆசி பெற்­றுக்­கொண்ட திரு மோடி செங்­கோலை மக்­க­ள­வைத் தலை­வ­ரின் இருக்­கைக்கு அருகே நிறு­வி­னார்.

இந்­தியா விடு­தலை பெற்­ற­போது முதல் பிர­த­மர் ஜவ­கர்­லால் நேரு­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட அந்­தச் செங்­கோலை உரு­வாக்­கிய உம்­மிடி நகைக்­கடை உரி­மை­யா­ளர்­க­ளை பிர­த­மர் மோடி கௌர­வித்­தார்.

புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தின் கட்­டு­மா­னப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் வந்தே மாத­ரம் பாடலை நாதஸ்­வ­ரத்­தில் இசைத்த கலை­ஞர்­க­ளுக்­கும் அவர் மரி­யாதை செய்­தார்.

திறப்­பு­வி­ழா­வின் இரண்­டாம் கட்ட நிகழ்ச்சி தேசிய கீதத்­து­டன் தொடங்­கி­யது.

அதில் உரை­யாற்­றிய திரு மோடி, “தன்­னி­றைவு பெற்ற இந்­தி­யா­வின் எழுச்­சிக்­குச் சான்­றாக இருக்­கும் புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் இந்­தி­யா­வின் உறு­தியை உல­கிற்கு எடுத்­துச் சொல்­வ­தாக அமைந்­துள்­ளது,” என்­றார். இந்­தியா விடு­தலை பெற்று 75 ஆண்­டு­கள் நிறை­வு­பெற்­ற­தைக் குறிக்­கும் வித­மாக ரூ.75 நாண­யத்­தை­யும் புதிய நாடா­ளு­மன்­றத் திறப்­பு­வி­ழா­வைக் குறிக்­கும் அஞ்­சல்­த­லை­யை­யும் அவர் வெளி­யிட்­டார்.

திறப்­பு­வி­ழாவை ஒட்டி இந்து, இஸ்­லாம், கிறிஸ்­துவம், பௌத்­தம் உள்­ளிட்ட பல சமயக் கூட்டு வழி­பாடு நடை­பெற்­றது.

அதி­பர்­தான் புதிய கட்­டத்­தைத் திறந்­து­வைக்க வேண்­டும் எனக் கூறி திமுக உள்­ளிட்ட 20 எதிர்க்­கட்­சி­கள் திறப்­பு­வி­ழா­வைப் புறக்­க­ணித்­தன.

பழைய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் அருங்­காட்­சி­ய­மாக மாற்றப்­ப­ட­வி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!